பக்கம்:மாயக் கள்ளன்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


47 சுந்தரிக்குப் பதினேழு வயது முடியும் சமயத்தில் கமலா புரிக்கு ஒரு முனிவர் வந்தார். அரசனும் அரசியும் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்று உபசரித்தார்கள். சுந்தரி அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய முன்வந்தாள். அவளைப் பார்த்த பிறகு முனிவர், சுந்தரிக்குப் பதினெட்டாம் வயதிலே ஒரு தீங்கு நேரப்போகிறது. அதைத் தடுக்க வேண்டுமானல் பதினெட்டாம் வயது முடியும் வரை ஓராண்டு முழுவதும் அவள் ஆணுக உள்ள யாரையும் கண்ணுல் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் அந்த ஆணுலேயே அவளுக்கு மரணம் உண்டாகும்’ என்று கூறினர். இவ்வாறு அரசனுக்கு எச்சரிக்கை செய்து விட்டு அவர் போய்விட்டார். முனிவர் சென்றதும் அரசன் அவர் கூறிய வார்த்தைகளைப் பற்றிக் கவலையோடு எண்ணமிடலானன். மகளுக்கு ஆபத்து வராமல் தடுப்பதற்கு என்ன வழியென்று முனிவரிடம் கேட்க அவன் மறந்துவிட்டான். அதற்காக அவன் மிகவும் வருந்தின்ை. கடைசியிலே அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ஒரு வருஷம் முடியும் வரையில் சுந்தரியை ஆண்கள் பார்க்க முடியாதபடி ஒரு தனியிடத்தில் வைத்துவிடலாம் என்று அவன் நினத்தான். உடனே அவ்வாறு வைப்பதற்கு எல்லா ஏற்பாடு களையும் கவனிக்குமாறு உத்தரவிட்டான். அடுத்த நாள் முதல் சுந்தரிக்குப் பதினெட்டாம் வயது தொடங்குகிறது. அதல்ை, அன்றிரவே அவளேக் கமலாபுரிக் கோட்டையிலே, ஓர் உயரமான பகுதியிலே தனியாக இருந்த மாளிகைக்கு அனுப்பினன். சில தோழிப் பெண்களே அவளுக் குப் பணிவிடை செய்யவும், அவளைப் பாதுகாக்கவும் வைத்தான். அந்த இடத்திற்கு ஆண்கள் யாருமே போகக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டான். சுந்தரி அங்கேயே ஒரு வருஷத்தைக் கழிக்கவேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தான். இந்த ஏற்பாட்டால் அரசனுடைய கவலே நீங்கிற்று. அவன் தன் மகளைப் பார்க்காமலேயே காலங்கழித்தான். அரசி மட்டும் அடிக்கடி சென்று, சுந்தரியைப் பார்த்து வருவாள். சுந்தரிக்கு விருப்பமானவற்றையும் கொடுத்தனுப்பினள்.