பக்கம்:மாயக் கள்ளன்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


53 அதல்ை அவள் கோட்டைச் சுவரின்மீதேறி அங்கிருந்து கீழே குதித்துவிட்டாள். உயரமான அந்தக் கோட்டைச் சுவரிலிருந்து குதித்ததால் அவள் உடம்பு நொறுங்கிப் போப் விட்டது. உயிரும் போய்விட்டது. " இவ்வாறு மாயக்கள்ளன் உருக்கமாகக் கதையைச் சொல்லி முடிக்கும் போது, ஆத்மரங்கன் மலேப்படியில் உறங்கி விட்டான். மாயக்கள்ளனுக்கு மறுபடியும் வெற்றி கிடைத்தது. அவன் ஆத்மரங்கனே மலையடிவாரத்திற்குத் தூக்கிக்கொண்டு போய்விட்டான். தன் சூழ்ச்சி பலித்ததை எண்ணி மாயக் கள்ளன் குதுசகலமடைந்தான்.