பக்கம்:மாயக் கள்ளன்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7. செங்காற்று ஆத்மரங்கன் மறுபடியும் மலேயடிவாரத்திலே வெகு நேரம் உறங்கிக்கொண்டிருந்தான். பிறகு, திடீரென விழித்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். அடிவாரத்திலே கிடப்பதை அறிந்தான். அதையறிந்து அவன் சோர்வடையவில்லே மீண்டும் மலேயேறத் தீர்மானித்தான். இந்தத் தடவை அவன் ஒரு போர் வீரகை உருவம் தாங்கின்ை. அவனுடைய உடம்பிலே கவசமிருந்தது: கையிலே வாள் மின்னிற்று. ஆத்மரங்கன் மலேயுச்சியை நோக்கிப் புறப்பட்டான். கதை சொல்வதற்கு மாயக்கள்ளன் வந்து சேர்ந்தான். அவன் கதையைத் தொடங்கின்ை. 'வீரசிங்கப் பட்டணம் என்று ஒரு பட்டணம் இருந்தது. அங்கே விக்கிரமன் என்ருெரு வீரன் இருந்தான். அவன் வில்வித்தையிலும், வாள்வீச்சிலும் மிகவும் தேர்ந்தவன். அவன் வாளெடுத்து வீசத் தொடங்கில்ை அவனுக்கு முன்னல் எதிர்த்து யாரும் நிற்க முடியாது. அவ்வளவு திறமை வாய்ந்தவன் அவன். விக்கிரமன் பல சண்டைகளிலே வெற்றியடைந்திருக் கிருன். அதல்ை அரசனுக்கு அவனிடத்திலே மிகுந்த அன்புண்டு. அரசன் தனது படையிலே விக்கிரமனுக்கு உயர்ந்த பதவிகளையெல்லாம்_கொடுத்தான். ஆல்ை, விக்கிரமனுக்கு அந்தப் பதவி களிலே விருப்பமில்லே. உலகத்திலே துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று அவன் நிக்னத்தான். பலம் இல்லா தவர்களைப் பலமுள்ளவர்கள் துன்பப்படுத்துவதைக் கண்டால்