பக்கம்:மாயக் கள்ளன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மாளிகைக்கு முன்னலிருந்த ஒரு மரத்தில் செங்காற்றைக் கட்டிவிட்டு, விக்கிரமன் மாளிகைக்குள்ளே புகுந்தான். உள்ளே விசாலமான மண்டபங்கள் பல இருந்தன. ஆனல், அங்கே யாரையுமே காணுேம். யாரும் அங்கு வசிப்பதாகவே தெரியவில்லை. விக்கிரமன் அந்த மாளிகையின் பின் பகுதிக்குச் சென்றன். அங்கேயும் யாருமில்லை. ஆனல், அந்தப் பகுதியிலே மனிதக் குரல் கேட்டது. துன்பந்தாங்க முடியாமல் "ஐயோ அப்பா’ என்று யாரோ மெதுவாக அனத்துவது போலிருந்தது. விக்கிரமன் காது கொடுத்து உற்றுக் கேட்டான். அந்தக் குரல் மறுபடியும் காதில் நன்ருக விழுந்தது. அவன் ஒவ்வோர் அறைக்குள்ளும் ஒடி ஒடிப் பார்த்தான். யாரையும் காண முடியவில்லை. ஆனால், அந்தக் குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு பெரிய சுவருக்குள்ளேயிருந்து அந்தக் குரல் வருவது போலத் தோன்றிற்று. விக்கிரமன் சுவரின்மேல் காதை வைத்துக் கேட்டான். அந்தக் குரல் இன்னும் தெளிவாகக் காதில் விழுந்தது. உடனே, அவன் அந்தச் சுவரை நன்ருக ஆராய்ந்து பார்த்தான். கையால் தடவித் தடவிப் பார்த்தான். ஓரிடத்திலே ஓர் இரகசியக் கதவு இருப்பது தெரிந்தது. அவன் கதவைத் தட்டினன். யாரும் அதைத் திறக்கவில்லை. பிறகு, விக்கிரமன் தன் பலத்தையெல்லாம் உபயோகித்து அதை ஒரு புறமாகத் தள்ளிப் பார்த்தான். கதவு மெதுவாகத் திறந்தது. விக்கிரமனுக்கு முதலில் ஒன்றுமே தெரியவில்லை. உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. பிறகு, கொஞ்சங்கொஞ்சமாக உள்ளே எப்படியோ வெளிச்சம் வந்தது. அந்த வெளிச்சத்தின் உதவியால் விக்கிரமன் நாலு பக்கமும் பார்த்தான். ஓரிடத்தில் ஒரு பெரிய பாறை இருந்தது. அதிலே இரும்பு முளைகளே அடித்திருந்தார்கள். அவற்றிலிருந்து பெரிய பெரிய இரும்புச் சங்கிலிகள் தொங்கின. வயதான கிழவன் ஒருவனே ஒரு சங்கிலியிலே கட்டியிருந்தார்கள். அவனல் கைகளை மட்டும் அசைக்க முடிந்தது. உடம்பெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/59&oldid=867728" இலிருந்து மீள்விக்கப்பட்டது