பக்கம்:மாயக் கள்ளன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

லாம் சங்கிலியிலே மறைந்து கிடந்தது. கழுத்திலும் ஒரு சங்கிலி இறுக்கிக்கொண்டிருந்தது.

விக்கிரமன் அவனிடம் ஓடினான். சங்கிலிகளை அவிழ்த்துவிட முயன்றான். ஆனால், முடியவில்லை . எவ்வளவு முயற்சி செய்தாலும் சங்கிலிகளைக் கழற்ற முடியாது என்று அவனுக்குத் தோன்றிற்று. பாறையோடு சேர்த்திருந்த இரும்பு முளைகளை ஒடிப்ப தற்காக அவன் பெரிய பெரிய கற்களைக் கொண்டு வந்து அவற்றின்மேல் வேக மாகப் போட்டான். முளைகள் கொஞ்சமும் அசையவில்லை.

அந்தச் சமயத்தில் அந்தக் கிழவன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான

“ தம்பி, நீ யார்?' என்று அவன் கேட்டான். விக்கிரமன் தனது வரலாற்றை யெல்லாம் சொன்னான். அதைக் கேட்டுக் கிழவனுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. விக்கிரமா, இப்படி உன்னுடைய பலத்தால் இந்தச் சங்கிலிகளை அறுத்தெறிய முடியாது. இங்கிருந்து வடக்குப் பக்கமாகவே போனால் இன்னும் எட்டு வனங்கள் இருக்கும். இது முதல் FAAA

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/60&oldid=1276998" இலிருந்து மீள்விக்கப்பட்டது