பக்கம்:மாயக் கள்ளன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வனம். கடைசியில் உள்ளது ஒன்பதாவது வனம்,

ஒவ்வொரு வனத்திலும் இதைப் போலவே ஒரு வெள்ளை மாளிகை உண்டு. அவற்றை நீ கண் ணெடுத்தும் பார்க்கக் கூடாது. அவ்வாறு எட்டா வது வனத்தை விட்டுவிட்டு மேலும் போனால் ஒன்பதா வது வனம் தென்படும். அதி லேயும் ஒரு வெள்ளை மாளிகை இருக்கிறது. அதை ஓர் ஐந்து தலை நாகப்பாம்புகாவல்புரிகிறது. அது வஞ்சகம் நிறைந்தது. நினைத்த மாதிரி வடிவம் எடுத்துக் கொள்ளும். அதைக் கண்டு நீ ஏமாந்து போகக்கூடாது. அதைக் கொன்றுவிட்டு 'நீ மாளிகைக்குள்ளே நுழைந்தால் அங்கே மின்னல் போல ஜொலித்துக்கொண்டு ஒரு வேல் இருக்கும். அதற்கு ஞானச் சுடர் வேல் என்று பெயர். அதை எடுத்துக்கொண்டு வந்தால் இந்தச் சங்கிலிகளைச் சுலபமாக அறுத்தெறிந்து விடலாம். என்னுடைய துன்பமெல்லாம் தீர்ந்து போகும்' என்று அவன் கூறினான். அவன் கூறியபடியே அந்த வேலைக் கொண்டுவந்து சங்கிலிகளை அறுத்தெறிவதாகக் கிழவனிடம் விக்கிரமன் வாக்குக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான். விக்கிரமன் செங்காற்றின் மேல் ஏறிக்கொண்டு கிழவன் கூறியபடியே முதல் எட்டு வனங்களையும் கடந்து சென்றான். ஒவ்வொரு வனத்தின் மத்தியிலும் ஒரு வெள்ளை மாளிகை இருந்தது. ஆனால், விக்கிரமன் அந்த மாளிகையின் பக்கத்தில் கூடச் செல்லவில்லை. அவன் வேகமாக ஒன்பதாவது வனத்தில் நுழைந்து, அதன் மத்தியிலிருந்த வெள்ளை மாளிகைக்குள் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/61&oldid=1277006" இலிருந்து மீள்விக்கப்பட்டது