பக்கம்:மாயக் கள்ளன்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


59 மாளிகையின் தலைவாசலில் ஓர் அழகான மங்கை நின்று கொண்டிருந்தாள். அவள் விக்கிரமனேக் கண்டதும் புன்சிரிப் போடு வரவேற்ருள். 'வாருங்கள் வாருங்கள்’ என்று அன்போடு பேசினுள். ஐந்துதலே நாகம்தான் இப்படி வடிவம் எடுத்திருக்கிறதோ என்று விக்கிரமனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அதனல் அவன் குதிரையை விட்டிறங்காமல் யோசனை செய்து கொண்டிருந்தான். அதைக் கண்டு அந்தப் பெண், அந்தப் பயித்தியத்தைப் பார்த்துவிட்டா வந்தீர்கள் ?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். 'எந்தப் பயித்தியம் ?’ என்று விக்கிரமன் திருப்பிக் கேட்டான். 'முதல் வனத்திலே உள்ள மாளிகையில் இருக்கிற கிழவன் ஒரு பயித்தியம். அவனே வெளியே விட்டால் கண்ணில் கண்டவரையெல்லாம் அடிப்பான். அவனுல் எல்லோருக்கும் பரிய தீங்கு நேரும். அதற்காகத்தான் அவனே இரும்புச்