பக்கம்:மாயக் கள்ளன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சங்கிலிகளால் கட்டிவைத்திருக்கிருர்கள்’ என்று அந்த மங்கை சொன்னுள். விக்கிரமன் அவளுடைய அழகில் மயங்கிப் போப் விட்டான். அவள் சொல்லுவதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பின்ை. "இந்த மாளிகை உங்களுடையதா ? நீங்கள் யாரென்று எனக்குச் சொல்லுவீர்களா ?’ என்று விக்கிரமன் கேட்டான். இது என்னுடைய மாளிகைதான். என் பெயர் நாகவல்லி. என்னே அந்தப் பயித்தியம் ஐந்துதலே நாகம் என்று உங்களிடம் சொல்லியிருக்கும்’ என்று கூறிக்கொண்டே அவள் வாய்விட்டுச் சிரித்தாள். அந்தச் சிரிப்பிலே விக்கிரமனுடைய சந்தேகமெல்லாம் நீங்கிவிட்டது. அவன் குதிரையை விட்டிறங்கி நாகவல்லியோடு மாளிகைக்குள் சென்ருன். விக்கிரமனுக்கு எல்லாப் பணிவிடைகளும் நன்ருக நடந்தன. நல்ல நல்ல உண்டிகளும் கிடைத்தன. நாகவல்லி அவனிடம் மிகுந்த அன்பு காட்டினுள். அதனல் விக்கிரமன் அவளேக் கலியாணம் செய்துகொண்டு, அங்கேயே தங்கி விட்டான். கிழவனுக்குக் கொடுத்த வாக்கையும் மறந்தான். நாகவல்லி மாதத்திற்கொரு தடவை அமாவாசையன்று இரவிலே தனியாக எங்கேயோ போப்விட்டுப் பொழுது விடியும் சமயத்தில் திரும்பி வருவாள். அவள் எங்கு செல்கிருளென அறிந்துகொள்ள விக்கிரமன் ஆசைப்பட்டான். ஆனால், அவள் போகுமிடத்தைப்பற்றி மட்டும் அவனிடம் கூறவில்லை. அதை ரகசியமாக வைத்திருந்தாள். விக்கிரமனுக்குப் L!.60 €)]6ðó5!! Ħf'6JT எண்ணங்கள் தோன்றின. அவள் இப்படி ரகசியமாகப் போகும் இரவன்று தானும் ரகசியமாக வெளியே போகத் தீர்மானித்தான். எட்டாவது வனத்திலே உள்ள மாளிகையில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தேரியாமல் பார்த்துவர ஆசை கொண்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/63&oldid=867740" இலிருந்து மீள்விக்கப்பட்டது