பக்கம்:மாயக் கள்ளன்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


65 விக்கிரமன் பிரகாசமான அந்த வெளிச்சத்தை நோக்கி மேலும் உள்ளே போனன். அந்தக் குகைக்குள் சென்றதும் நாகவல்லி தனது சுயரூபம் எடுத்துக்கொண்டாள். அங்கு தான் அவள் ஐந்துதலே நாகமாக இருப்பாள். ஐந்துதலே நாகம் தனது வாயைத் திறந்து, அந்தச் சுரங்க வழியவ்வளவு பெரிதாகச் செய்துகொண்டு மறைந்திருப்பதை அவன் கவனிக்கவில்லை. அந்த நாகத்தின் வாய்க்குள்ளிரு ந்த மாணிக்கக் கற்களிலிருந்துதான் அவ்வளவு பிரகாசமாக வெளிச்சம் வந்தது. சுரங்க வழிதானென்று ஏமாந்துபோய் விக்கிரமன் ஐந்துதலே நாகத்தின் வாய்க்குள் நுழைந்துவிட்டான். அப்படி அவன் நுழைந்ததும் பாம்பு தனது வாயை லபக்கென்று மூடிக் கொண்டது. விக்கிரமன் உள்ளே அகப்பட்டு உயிர் துறந்தான்.” இவ்வாறு மாயக்கள்ளன் கதையை முடிப்பதற்குள்ளாகவே ஆத்மரங்கன் மலைப்படியில் படுத்து உறங்கிவிட்டான். மாயக்கள்ளனுக்கு மீண்டும் வெற்றி கிடைத்துவிட்டது. அவன் ஆத்மரங்கண்த் தூ க் கி க் .ெ கா ண் டு மலையடிவாரத்திற்குப் பழையபடி வந்துவிட்டான். 1DT. 35—5