பக்கம்:மாயக் கள்ளன்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


67 வேண்டும் என்று அவன் விரும்பின்ை. தங்கம் நிறைய வேண்டும் என்று அவனுக்குப் பேராசை. அதல்ை, அவனேத் தங்கமுத்து மாணிக்கம் என்பதற்குப் பதிலாகத் தங்கப்பித்து மாணிக்கம் என்று கேலியாகச் சொல்வார்கள். அவன் நல்ல உணவுக்கூடச் சாப்பிடமாட்டான்.உணவுக்குப் பணம் செலவழிக்கவும் அவனுக்கு மனம் வராது. பல நாள்களில் கஞ்சி மட்டும் குடிப்பான். யாருக்காவது ஒரு சல்லிக்காக தருமம் செய்யவும் அவன் சம்மதிக்கமாட் டான். அதனுல், அவனிடம் யாருமே தருமம் கேட்க வரமாட்டார்கள். ஒரு நாள், தூரதேசத்திலிருந்து ஒரு பரதேசி அந்த ஊருக்கு வந்தான். அவனுக்குத் தங்கமுத்து மாணிக்கத்தைப் பற்றித் தெரியாது. அவன் எழடுக்கு மாளிகையைப் பார்த்ததும், முதலில் பிச்சை கேட்க அங்குச் சென்ருன். தங்கமுத்து மாணிக்கம் அவனே வாயில் வந்தபடி திட்டினன்.