பக்கம்:மாயக் கள்ளன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நெடுந்துரம் போல்ை இங்ாத்துப்போகுமென்று அவன் நினேத்தான். அதனல், ஒரு சிறிய மட்டக்குதிரைமீது ஏறிக் கொண்டான். அது கொஞ்சம் நொண்டி. இருந்தாலும் அதுவே போதுமென்று அவன் புறப்பட்டான். அந்த மட்டக் குதிரையை அடித்துவிரட்டி வேகமாக ஓடுமாறு அவன் செய்து கொண்டிருந்தான். பாவம், மட்டக் குதிரையும் அடி பொறுக்க மாட்டமல் நொண்டி ஓடிற்று. அவன் இளேப்பாறுவதற்குக்கூட அதிக நேரம் ஓரிடத்தில் தங்கவில்லை. குதிரைக்குச் சரியான உணவும் கொடுக்கவில்லை. அதற்கு ஒய்வே கிடையாது. அடிதான் நிறையக் கிடைத்தது. அதல்ை, அது வனத்திற்குள்ளே கொஞ்ச தூரம் சென்றதும் கீழே விழுந்துவிட்டது. நெடுந்துாரம் ஓடிவந்த கக்ாப்பாலும், பசி மயக்கத்தாலும் அது எழுந்திருக்க முடியாமல் கிடந்தது. தங்கமுத்து மாணிக்கம் சாட்டையால் அதை அடி அடியென்று அடித்தான். எப்படியாவது தங்கவரப்பொருமாள் கோயிலுக்குச் சீக்கிரமாகப் போய்ச் சேரவேண்டுமென்று அவனுக்கு ஆத்திரம். குதிரை அடி பொறுக்காமல் தரையில் விழுந்தபடியே இறந்துவிட்டது. அதைக் கண்டு தங்கமுத்துமாணிக்கத்திற்கு அழுகை வந்துவிட்டது. இருநூறு ரூபாய்க்கு வாங்கிய குதிரை போய்விட்டதே. இருநூறு ரூபாய் அநியாயமாகத் தொலைந்ததே’ என்று அவன் குதிரையின் பக்கத்தில் உட்கார்ந்து, வாய்விட்டு அலறி அழுதுகொண்டிருந்தான். இதை ஒரு குள்ளநரி பார்த்தது. செத்துக் கிடக்கும் குதிரையைத் தின்னவேண்டும் என்று அதற்கு ஆசை. அதன் வாயில் நீர் ஊறிக்கொண்டிருந்தது. தங்கமுத்து மாணிக்கமோ குதிரையை விட்டுவிட்டுப் போவதாகத் தெரியவில்லே. இதல்ை குள்ளநரி ஒரு தந்திரம் செய்தது. அது தங்கமுத்து மாணிக்கத்திடம் சென்று, ஐயா, என் இப்படி அழுது புலம்புகிறீர்?’ என்று மெதுவாகக் கேட்டது. "ஐயோ இருநூறு ரூபாய் போய்விட்டதே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/73&oldid=867761" இலிருந்து மீள்விக்கப்பட்டது