பக்கம்:மாயக் கள்ளன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 1 அவன் உரக்கக் கூவி அழுதான். குள்ளநரி கொஞ்சங் கொஞ்சமாக அவனுடைய வரலாற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டது. தங்கம் நிறைய வேண்டுமென்ற ஆசையால் அவன் வந்திருக்கிருனென்பதையும் அறிந்து கொண்டது. 'தங்கம்தானே உமக்கு வேண்டும்? தங்கம் நிறையக் கிடைப்பதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். கவலைப்படாதீர்’ என்று நரி தந்திரமாகப் பேசிற்று. அதைக் கேட்டவுடன் தங்கமுத்து மாணிக்கத்திற்கு அழுகை நின்றுவிட்டது. குள்ளநரியாரே, தங்கம் கிடைக்க வழி சொல்லுங்கள்' என்று பணிவோடுக் கேட்டுக்கொண்டான். குள்ள நரி அவனே அழைத்துக்கொண்டு வனத்திற்குள்ளே அரை மைல் தூரம் சென்றது. அங்கே ஓரிடத்தில் பல விதமான பூக்கள் நிறையப் பூத்திருந்தன. அவற்றில் தேனீக்கள் எராளமாக மொய்த்துக்கொண்டு ரீங்கா ர ம் செய்தன. பூச்செடிகளின் மேல் பல அணில்கள் துள்ளிக் குதித்து விளையாடின. செடிகளிலுள்ள காய்களையும் பழங் களையும் பறித்துத் தின்றன. தேனீக்களையும் அணில்களேயும் குள்ளநரி தங்கமுத்து மாணிக்கத்திற்குக் காட்டிற்று. அவை களால் அவனுடைய ஆசை நிறைவேறும் என்றது. அங்கேயே ஓரிடத்தில் உட்காரும்படியும் சொல்லிற்று. “உங்கள் அங்கவஸ்திரத்தை முன்னல் விரித்துப் போட்டு விட்டு நான் சொல்கிறபடி விடாது சொல்லுங்கள்’ என்று குள்ள நரி அவனிடம் தெரிவித்தது. நீங்கள் சொல்லுகிறபடியே செய்கிறேன்’ என்று அவன் வணக்கத்தோடு கூறினன். குள்ளநரி ஒரு சிறிய பாட்டுப் பாடியது: *சயாரே ஈயாரே எனக்கு நிறையத் தங்கம்தா அணிலாரே அணிலாரே ஆசை தீரத் தங்கம் தா!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/74&oldid=867763" இலிருந்து மீள்விக்கப்பட்டது