பக்கம்:மாயக் கள்ளன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

___________

72 இந்தப் பாட்டை ஓயாமல் சொல்லும்படி குள்ள நரி தங்கமுத்து மாணிக்கத்திற்கு உத்தரவிட்டது. அவன் உட்கார் நீ திருக்கும் இடத்தை விட்டு எழுந்திருக்கவே கூடாதென்றும் கண்டிப்பான ஆணையிட்டது.

_____

' நான் சொல்லுகிறபடி செய்தால் முன்னால் விரித்துப் போட்டிருக்கும் அங்கவஸ்திரத்தில் நிறையத் தங்கம் வந்து விழும்' என்று குள்ள நரி சொல்லிற்று. அதன் உத்தரவுப் படியே செய்வதாகத் தங்கமுத்து மாணிக்கம் தெரிவித்தான். குள்ள நரி கவலையில்லாமல் குதிரையைத் தின்னப் போய் விட்டது. தங்கமுத்து மாணிக்கம் அந்தப் பாட்டையே திருப்பித் திருப்பிக் கூறிக்கொண்டிருந்தான். உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. இவ்வாறு இரண்டு நாள்கள் சென்றன. அவன் பட்டினியாகக் கிடந்து ஓயாமல் அந்தப் பாட்டைச் சொல்வதைக் கேட்ட தேனீக்களுக்கும் அணில்களுக்கும் அவன்மேல் இரக்கம் உண்டாயிற்று. ' ஐயோ பாவம், இந்த மனிதன் தங்கத்துக்காக இப்படிப் பித்துப் பிடித்து அலைகிறானே' என்று அவை வருத்தப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/75&oldid=1276999" இலிருந்து மீள்விக்கப்பட்டது