பக்கம்:மாயக் கள்ளன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 தேனீக்கள் தாங்கள் பூக்களிலே எடுக்கும் மகரந்தத் தூள்களேத் தங்கமுத்து மாணிக்கத்தின் அங்கவஸ்திரத்தில் போட்டன. அந்தத் தூள்களின் நிறம் தங்கம் போல இருந்ததால் அவன் அவற்றை உண்மையான தங்கத் தூள்கள் என்றே நம்பிவிட்டான். தங்கத்தின் மேலிருந்த பைத்தியத்தால் அவனுக்கு அவை அப்படித் தோன்றின. அதல்ை,

ைஈ யாரே ஈயாரே

எனக்கு நிறையத் தங்கம்தா!" என்று உற்சாகமாக உரத்துக் கூவலானன். தேனீக்கள் மகரந்தத் தூளைப் போட்டுக்கொண்டே இருந்தன. அதைப் பார்த்த அணில்கள் பொன்னரளிப் பூக்களின் இதழ்களைப் பறித்துவந்து தங்கமுத்து மாணிக்கத்தின் முன்னல் போட்டன. அந்த இதழ்கள் தங்கக் காசுகள் போல மஞ்சளாக இருக்குமல்லவா? அவற்றையும் தங்கமென்றே தங்கமுத்து மாணிக்கம் எண்ணிவிட்டான். அதனல்,

  • அணிலாரே அணிலாரே

ஆசை தீரத் தங்கம்தா !” என்று மேலும் கூவிப் பாடத் தொடங்கின்ை. தங்கப்பித்துப் பிடித்த அவனுக்குப் பசிமயக்கத்திலே கண் இருண்டு போய் எல்லாம் தங்கமாகவே தோன்றின. தேனீக்களும் அணில்களும் உற்சாகத்தோடு வேல் செய்தன. மகரந்தத் தூள்களும் பொன்னரளி இதழ்களும் தங்கமுத்து மாணிக்கத்தின் முன்னுல் நூற்றுக்கண க் கி ல் விழுந்தன. குவியல் பெரிதாக வளர்ந்துகொண்டே இருந்தது. அதைக் கண்டு அவனுடைய பாட்டும் பெரிய குரலில் வெளி வந்தது. சில நாள்களில் அங்கவஸ்திரமே நிறைந்துவிட்டது. தங்கமுத்து மாணிக்கம் மகரந்தத் தூள்களேயும் பொன்னரளி இதழ்களையும் சேர்த்து, அப்படியே ஒரு பெரிய மூட்டையாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/76&oldid=867766" இலிருந்து மீள்விக்கப்பட்டது