பக்கம்:மாயக் கள்ளன்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9. சாட்டை அடி மாயக்கள்ளனுடைய சூழ்ச்சியால் எமாற்றப்பட்ட ஆத்ம ரங்கன், நெடுநேரம் வரையிலும் மலேயடிவாரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். பிறகு, திடீரென்று அவனுக்கு விழிப்பு உண்டாயிற்று. அவன் எழுந்தான். மலேமேல் எறு வதற்கு மறுபடியும் முனேந்தான். இந்தத் தடவை அவன் நாற்பது வயதுள்ள ஒரு பெண்ணுக உருவமெடுத்துக்கொண் டான். அவன் மலைப்படிகளில் காலெடுத்து வைத்ததும் மாயக் கள்ளன் வந்து சேர்ந்தான். ஒன்றும் அறியாதவன் போல அவன் நடித்தான். மறுபடியும் கதை சொல்லத் தொடங் கின்ை. “ஆதிலிங்கபுரம் என்று ஓர் அழகான பட்டணம் இருந்தது. அந்தப் பட்டணத்திலே ஒரு பெரிய கோவில் உண்டு. அந்தக் கோயிலிலுள்ள சுவாமிக்கு ஆதிலிங்கேசர் என்று பெயர். அதல்ைதான் அந்தப் பட்டணத்திற்கு ஆதிலிங்கபுரம் என்று பெயர் வந்தது. ஆதிலிங்கபுரத்திலே வள்ளி நாயகி என்ருெரு பெண் தன் கணவைேடு வசித்து வந்தாள். அவர்களுக்கு வெகு கால மாகக் குழந்தை இல்லை. அதனல் வள்ளிநாயகி ஆதிலிங்கேசர் கோயிலுக்குத் தினமும் சென்று கடவுளேத் தொழுது வருவாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அதைக் கண்டு அவளும் அவள் கணவனும் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். ஆனால், அந்தச் சந்தோஷம் அதிக நாள் நிலைக்கவில்லை. ஏனென்ருல், அந்தக் குழந்தை ஊமையாக இருந்தது. ஒரு வார்த்தைகூட அது பேசவில்லை.