பக்கம்:மாயக் கள்ளன்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 இப்பொழுது அவள் கடவுளிடம் அதிக ஆவலோடு வரம் கேட்கத் தொடங்கிள்ை. தன் மகன் ஊமையாக இல்லாமல் பேசும் திறமையைப் பெற்றுவிட்டால் அவனுக்குப் பதிலாக அவள் ஊமையாக இருக்கத் தயார் என்று கடவுள் முன்னிலே யில் கூறிள்ை. 'ஆதிலிங்கேசா, என் மகனுக்குப் பேசும் திறமை கொடு. அவனுக்குப் பதிலாக நான் என்றும் ஊமையைப் போல இருந்துவிடுகிறேன். நான் ஊமையாக இருக்கத் தயார். என் மகன் மட்டும் ஊமையாக இருக்கக் கூடாது. இந்த வரம் கொடு’ என்று கேட்கத் தொடங்கினுள். இப்படி அவள் பல நாள்கள் மனமுருகிக் கேட்டாள். ஆதிலிங்கர் முன்னியிைல் நின்று அழுதாள். நான் ஊமையாக இருந்துவிடுகிறேன். என் மகனுக்குப் பேசக்கூடிய திறமை அருள்” என்று வாய்விட்டுக் கதறிள்ை. என்ன ஆச்சரியம்! திடீரென்று ஒரு நாள் ஆதிநாதன் நன்ருகப் பேசத் தொடங்கினன். யாரோ கனவில் வந்து அவனுக்குப் பேசச் சொல்லிக் கொடுத்தது போலிருந்ததாம். மறுநாள் அவன் பேச ஆரம்பித்துவிட்டான். பேசியதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு அழகாகப் பாடக்கூடிய சக்தியும் கிடைத்தது. அவனுடைய குரல் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்தது. அவன் சிறந்த சங்கீத வித்வாளுகிவிட்டான். எல்லோரும் அவனுடைய பாட்டுத் திறமையைப் புகழ்ந்து கொண்டாடினர்கள். ஆதிநாதனுக்குப் பேசும் திறமை வந்ததைக் கண்ட வுடனே வள்ளிநாயகி மெளன விரதம் எடுத்தாள். கடவுளின் முன்னுல் அவள் கூறியிருந்தபடி அவள் ஊமையைப்போலப் பேசாமல் வாழத் தொடங்கிள்ை. அதனுடைய காரணம் ஆதி நாதனுக்கோ மற்றவர்களுக்கோ தெரியாது. ஆதிநாதன் பல இடங்களிலே பாட்டுச் கச்சேரி செய்தான். அவனப் பல பேர் ஆவலோடு அழைத்தாாகள். மக்கள் ஆயிரக்கணக்காகக் கூடி, அவன் பாட்டைக் கேட்டு