பக்கம்:மாயக் கள்ளன்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


79 இன்பமடைந்தார்கள். ஆதிநாதனுக்குப் புகழ் வந்ததோடு பணமும் நிறையக் கிடைத்தது. அவன் ஓர் அழகான மாளிகை கட்டிக்கொண்டு அதில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பல பேர் இப்பொழுது பெண் கொடுக்க முன் வந்தார்கள். ஆதிநாதன் அழகுசுந்தரி என்ற ஒரு பெண்ணக் கலியாணம் செய்துகொண்டான். அழகுசுந்தரி பெயருக்கேற்றவாறு மிகுந்த அழகோ டிருந்தாள். அவள் ஆதிநாதனுடைய மாளிகைக்கு வந்ததும் அதிகாரமெல்லாம் அவள் கைக்கு மாறின. ஆதிநாதன் அவளுடைய அழகிலே மயங்கிக் கிடந்தான். அதனல், அவள் விருப்பப்படியே நடக்கத் தொடங்கினன். அவள் வைத்தது தான் சட்டம். அதற்கு விரோதமாக ஆதிநாதன் பேச மாட்டான். ஊமையாக இருக்கும் மாமியாராகிய வள்ளி நாயகியை அழகுசுந்தரிக்குப் பிடிக்கவில்லே. நாலு பேருக்கு முன்னுல் வள்ளிநாயகி வந்தால் அழகுசுந்தரிக்கு அவமானமாக இருந்தது. மாமியார் ஊமையாக இருப்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்று அவள் நினைத்தாள். 'நமது வீட்டுக்குப் பெரிய பெரிய சீமான்கள், சீமாட்டிகள் எல்லாம் வருகிருர்கள். அவர்களுக்கு முன்னல் உங்கள் ஊமைத் தாயார் வரக்கூடாது’ என்று அவள் ஆதிநாதனிடம் கூறினுள். ஆதிநாதன் பதில் ஒன்றும் கூறவில்ல. அவள் விருப்பப்படியே செய்யும்படி விட்டு விட்டான். மாளிகையின் பின்புறத்திலே தோட்டக்காரன் வசிப்பதற் தாக ஒரு குடிசை இருந்தது. அதற்குப் பக்கத்தில் மற்ருெரு குடிசேைபாடச் சொன்னுள் அழகுசுந்தரி. அந்தக் குடிசையிலே வள்ளிநாயகியை வசிக்கும்படி அவள் உத்தரவிட்டாள். "இந்தக் குடிசையை விட்டு மாளிகைக்குள் வரக்கூடாது' என்று அவள் கண்டிப்பாகக் கூறிவிட்டாள். வள்ளி நாயகி பேசாமல் அவள் சொல்லியவாறே குடிசையில் வசித்து வந்தாள்.