8O
மகன் சந்தோஷமாக இருந்தால் அதுவே போதும் என்று அவள் நினேத்துக்கொண்டு மாளிகையின் பின்புறத்திலே காலத்தைக் கழித்தாள்.
அங்கே குடிசைக்கு முன்னல் இருந்த இடத்தில் அவள் ஒரு பூந்தோட்டம் உண்டாக்கிள்ை. அதில் பூக்கும் பூக்களைக் கொண்டு அழகான மாலேகள் கட்டினள். அவளுடைய குடிசையிலே ஆதிலிங்கேசர் படம் ஒன்றை வைத்து, அதற்கு அந்த மாலேகளைப் போட்டாள். தன் மகன் சுகமாக இருக்க வேண்டும் என்று கடவுளேத் தினமும் வேண்டிக்கொண்டு வாழ்ந்து வந்தாள்.
இப்படி இருக்கும் போது அழகுசுந்தரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை நாளடைவில் ஓடி விளையாடத் தொடங்கிற்று. கொஞ்சிக் கொஞ்சிப் பேசிற்று. அது மாளிகையின் பின்புறத்திற்கு வரும். பாட்டி, பாட்டி’ என்று வள்ளிநாயகியை ஆசையோடு கூப்பிடும். வள்ளி நாயகிக்கு அந்தக் குழந்தையிடம் ரொம்பம் பிரியம். அவள் ஊமையைப்போல் பேசாமல் இருந்தாலும் குழந்தைக்குப் பிரியமானபடியெல்லாம் வேடிக்கை காட்டுவாள். அதன் தலையிலே அழகு அழகாகப் பூமாலேகள் சூட்டுவாள். குழந்தை அவளிடமே இருக்க விரும்பும்.
ஆல்ை, அழகுசுந்தரிக்குத் தன் குழந்தை வள்ளி நாயகியிடம் போவது பிடிக்கவில்லை. அந்த ஊமையைப் பாட்டி என்று கூப்பிடக்கூடாது என்று குழந்தையிடம் சொன்னுள். * அந்தக் குடிசைப்பக்கமே போகக்கூடாது’ என்றும் குழந்தைக்கு உத்தரவு போட்டாள்.
குழந்தை எப்படியாவது அழகுசுந்தரியை ஏமாற்றிவிட்டுத் தன் பாட்டியிடம் போய்விடும். அதல்ை, அழகுசுந்தரிக்குக் கோபம் அதிகரித்தது. தன் மாமியாரைக் கொடுமையாக நடத்தத் தொடங்கிள்ை. அவளுக்குச் சரியானபடி உணவு கொடுக்காமல் கஞ்சி ஊற்றத் தொடங்கிள்ை. வாயில் வந்த படியெல்லாம் அவளைத் திட்டினள்.
பக்கம்:மாயக் கள்ளன்.pdf/83
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
