பக்கம்:மாயக் கள்ளன்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


81 வள்ளிநாயகி இவற்றையெல்லாம் பொறுமையோடு சகித்துக்கொண்டு வந்தாள். அவள் வாய் திறக்கவே இல்லை. ஒரு நாள் அழகுசுந்தரியின் குழந்தை பாட்டியைக் கூப்பிட்டுக்கொண்டே ஓடி வந்தது. வள்ளிநாயகிஅதற்குச் சடை பின்னிவிட்டாள். பூக்களைக்கொண்டு புது விதமாகத் தலையில் அழகு செய்தாள். அந்தச் சமயத்தில் அழகுகந்தரி அங்கு வந்துவிட்டாள். அவளுக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. வள்ளிநாயகியைத் திட்டியதோடல்லாமல் கையி லிருந்த சாட்டையால் அவளே ஓங்கி ஓங்கி அடித்தாள். வள்ளி நாயகி மெளனமாக வலியைப் பொறுத்துக்கொண்டு நின்ருள்.

  • அம்மா, பாட்டியை அடிக்காதே’ என்று குழந்தை கூறிக் கொண்டே குறுக்கே வந்தது.

"அவளேப் பாட்டி என்று கூப்பிடக்கூடாதென்று உனக்கு நான் சொல்லவில்லேயா? என்று அழகுசுந்தரி கோபத்தோடு கேட்டாள். குழந்தை அவளேக் கவனிக்கவில்லே. பாட்டி, உனக்கு வலிக்குதா?’ என்று அது வள்ளிநாயகியைக் கேட்டது. ւDir. 5.-6