பக்கம்:மாயக் கள்ளன்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 அழகுசுந்தரிக்குக் கோபம் தாங்கமுடியவில்லை. அவளா பாட்டி? அவள் தோட்டக்காரி' என்று உரக்கக் கத்திச் சொன்னுள். "அவள் பாட்டிதான். நீ அம்மா, அவள் பாட்டி’ என்று குழந்தை மறுபடியும் சொல்லிற்று. அழகுசுந்தரிக்குக் கோபம் பொங்கியெழுந்தது. குழந்தையைச் சாட்டையால் ஓங்கியடித்தாள். பாட்டியென்று சொன்னல் சாட்டையடிதான் கிடைக்கும்’ என்று மேலும் உரக்கக் கூவிள்ை. சாட்டையடி பட்டதும் குழந்தை வீர் என்று கத்திவிட்டது . வள்ளிநாயகியால் அதைப் பொறுக்க முடியவில்லை. அவள் தன்னேயே மறந்துவிட்டாள். "ஐயோ, குழந்தையை அடிக்காதே, என்னே வேண்டுமானுல் அடி’ என்று வாய்விட்டுக் கூறிவிட்டாள். அவள் பேசுவதைக் கேட்டதும் அழகுசுந்தரி திடுக்கிட்டு நின்ருள். அந்தச் சமயத்தில் ஆதிநாதனும் அங்கு வந்து சேர்ந்தான். வெளியே போய்விட்டு அப்பொழுதுதான் அவன் மாளிகைக்குத் திரும்பின்ை. மாளிகையின் பின்புறத்திலே குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கவே அவன் அங்கு ஓடிவந்தான். அவனும், தன் தாய் வாய் திறந்து பேசியதைக் கேட்டு அப்படியே மரம் போல அசையாமல் நின்ருன். வள்ளி நாயகி பேசியதைக் கேட்டு அண்வரும் ஆச்சரியமடைந் தார்கள். அவள் அவ்வாறு பேசியது முதல் ஆதிநாதன் பழையபடி ஊமையாகிவிட்டான். அவனுல் பேசவே முடியவில்.ை "ஐயோ, என்னுடைய விரதத்தை மறந்துவிட்டுப் பேசி விட்டேனே. அதனல், என் மகன் மறுபடியும் ஊமையாகி விட்டானே’ என்று வள்ளிநாயகி மிகவும் வருத்தமடைந்தாள். அவள் இதுவரையில் பேசாமல் ஊமையைப் போலிருந்த காரணத்தை அறிந்ததும் அழகுசுந்தரி அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். மறுபடியும் தன் புருஷனுக்குப் பேசும்