பக்கம்:மாயக் கள்ளன்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83 சக்தி வரும்படி கடவுளிடம் வரம் கேட்கும்படி வள்ளிநாயகியின் காலில் விழுந்து வேண்டிக்கொண்டாள். வள்ளிநாயகியும் அவ்வாறே கடவுளே வேண்டினுள். பல முறை ஆதிலிங்கேசர் கோயிலுக்குப் போனள். பல தேசங்களுக்கு யாத்திரை சென்று, அங்குள்ள கோயில்களி லெல்லாம் வணங்கிள்ை. ஆல்ை, ஆதிநாதன் மறுபடியும் பேசவே இல்லே. அவன் ஊமையாகவே இருந்தான். வள்ளிநாயகி ஒவ்வொரு கோயிலாகப் போய்க்கொண்டே இருந்தாள்.” இவ்வாறு சொல்லிவிட்டு மாயக்கள்ளன் திரும்பிப் பார்த்தான். ஆத்மரங்கன் (மலேயேறுவதை விட்டுவிட்டு மலைப்படியில் படுத்து நன்ருகத் தூங்கிக்கொண்டிருந்தான். மாயக்கள்ளன் மகிழ்ச்சியடைந்தான். மறுபடியும் தனக்கு வெற்றி கிடைத்ததை அறிந்து சந்தோஷப்பட்டான். ஆத்மரங்கனேத் தூக்கிக்கொண்டு பழையபடி மலேயடிவாரம் போய்ச் சேர்ந்தான்.