பக்கம்:மாயக் கள்ளன்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


89 உலகத்திலுள்ள மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அலறி அழுதார்கள். மக்களின் தலைவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் மக்களைப்பற்றிக் கவலைப்படாமல் தாங்கள் தப்பினுல் போதுமென்று மலைக்குகைகளில் ஓடி ஒளியத் தொடங்கினர்கள். அந்தச் சமயத்திலே, இமயமலையிலே, ஒரு மகான் தவம் செய்துகொண்டிருந்தார். உலகத்திலுள்ள மக்களின் நிலையைக் கண்டு அவர் இரக்கம் கொண்டார். அவர் உலகத்திலுள்ள தலைவர்களேயெல்லாம் கூப்பிட்டு, அவர்களுக்கு உபதேசம் செய்தார். தலைவர்களெல்லாம் அவரைப் பார்த்து, எங்களுக்கு விஞ்ஞான பூதத்தைவிடப் பெரிய பூதத்தை உண்டாக்கிக் கொடுங்கள். உங்களுடைய தவத்தால் அதைச் செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள். அந்த மகான் சிரித்தார். 'தல்வர்களே, பூத்த்தை பூதத்தால் வெல்ல மு டி யாது. அன்பில்ைதான் அதை வெல்லலாம். ஆதலால், அணுவரக்கன் விரும்புகிறதுபோல அவனேயே உலகத்தின் சக்கரவர்த்தியாக ஆக்கிவிடுங்கள். அவனே எதிர்த்தால் உலகம் அழிந்துபோகும். எதிர்க்காமல் விட்டுவிட்டால் அவன் தானகவே அ ழி ந் து போவான்’ என்று சொன்னர்.