பக்கம்:மாயக் கள்ளன்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 அந்த மகானுடைய உபதேசத்தின்படி நடப்பதைத் தவிர வேறு வழியொன்றும் இல்லை. அதல்ை எல்லாத் தலைவர்களும் அதன்படி நடந்தார்கள். அணுவரக்கன் உலகத்திற்கே சக்கர வர்த்தி ஆகிவிட்டான். ஒவ்வொரு தேசத்திலுள்ள படைகளே யெல்லாம் அவன் கலைத்துவிட்டான். அங்கிருந்த பீரங்கி களேயும் துப்பாக்கிகளையும் விஞ்ஞான பூதத்திற்குக் கொடுத் தான். அவற்றையெல்லாம் பலகாரமாக விஞ்ஞான பூதம் சாப்பிட்டுவிட்டது. உலகத்தில் யாரும் இனிமேல் எந்திர ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று அவன் உத்தரவிட்டான். அப்படி ஆராய்ச்சி செய்தால் யாராவது விஞ்ஞான பூதத்தைவிடப் பெரிய பூதத்தை உண்டாக்கி,அவனேக் கொன்றுவிடுவார்கள் என்று அவனுக்குப் பயம். அவன் உலகத்திலுள்ள எல்லா ஆராய்ச்சிக் கூடங்களே யும் இடித்தெறிந்துவிட்டான். ஆராய்ச்சி செய்வதற்கான எந்திரங்களையும் உடைத்தெறிந்துவிட்டான். சிறிய கைத் தொழிற்சாலையைக்கூட அவன் விட்டு வைக்கவில்லை. இவ்வாறு செய்ததால் உலகத்திலே அண்வரும் எந்திரம் செய்யும் தொழிலே மறந்துவிட்டார்கள். எல்லோரும் நிலத்தை உழுதுகொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அணுவரக்கன் தன்னிடம் பத்தாயிரம் பேரை வைத் திருந்தான். அவர்களுக்கு மட்டும் அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும் செய்யத் தெரியும். அணுவரக்கன் ஒரு பெரிய ஆராய்ச்சிக்கூடம் கட்டியிருந்தான். அதில் இருந்துகொண்டு அந்தப் பத்தாயிரம் பேரும் அணுகுண்டுகளும், ஹைட்ரஜன் குண்டுகளும் செய்து விஞ்ஞான பூதத்திற்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். உலகத்திற்கே சக்கரவர்த்தியாகிவிட்ட போதிலும் அணுவரக்கனுக்குச் சந்தோஷம் உண்டாகவில்லே. அவனுக்குச் சந்தேகமும் பயமும் அதிகமாயின. யாராவது ரகசியமாகப் புதிய ஆயுதம் செய்துகொண்டிருந்தால் என்ன செய்வது என்று அவனுக்குச் சந்தேகம். யாராவது தன்னேவிடப்