பக்கம்:மாயக் கள்ளன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 பலவானாக வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயம். அதனால் அவன் விஞ்ஞான பூதத்திலேறி உலகத்தைச் சுற்றிக் கொண்டே இருந்தான். துப்பறியும் போலீசார்களை ரகசியமாக உலகமெங்கும் ஏவினான். ஒவ்வொரு மனிதனையும் ரகசியமாகக் கவனித்து வரும்படி அவன் உத்தரவிட்டான். அப்படி யிருந்தும் அவனுக்குச் சந்தேகமும் பயமும் தீரவில்லை; அவை வளர்ந்துகொண்டே இருந்தன. ஒரு நாள் அவனுடைய ஆராய்சிக்கூடத்திற்குள்ளே இரண்டு பூனைகள். யாருக்கும் தெரியாமல் புகுந்துவிட்டன. அவைகள் எந்திரங்களுக்கு மத்தியிலும் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளுக்கு மத்தியிலும் சுற்றிக்கொண்டிருந் தன. அந்தச் சமயத்தில் அங்கு வந்த அணுவரக்கன் அவற்றைப் பார்த்துவிட்டான். பூனைகளும் அவனைப் பார்த்தன. பார்த் ததும் அவைகள் ஜன்னல் வழியே எட்டிக் குதித்து ஓடிப்போய்விட்டன.

அணுவரக்கனுக்குச் சந் தேகம் உண்டாகிவிட்டது. அந்தப் பூனைகள் தன்னுடைய க ஆராய்ச்சிக் கூடத்திலுள்ள ஒ ரகசியங்களைக் கண்டுபிடித்து யாரிடமோ சொல்லப்போயிருக் கின்றன என்று அவன் நினைத்தான். உடனே அவன் அந்தப் பூனை களைத் தேடிப் பிடித்துக் கொல்லும்படி உத்தரவிட்டான். ஆனால், அந்தப் பூனைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை எப்படியோ தப்பித்துக்கொண்டு எங்கேயோ போய் விட்டன. அணுவரக்கனுக்குக் கோபம் பொங்கி எழுந்தது. உலகத்திலுள்ள எல்லாப் பூனகளையும் உடனே கொன்று விட வேண்டும் என்று எல்லோருக்கும் அறிவித்தான். யார் வீட்டிலாவது பூனையிருந்தால் அந்த வீட்டிலுள்ள அத்தனை பேரையும் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினான். விஞ்ஞான பூதத்தின்மேல் ஏறிக்கொண்டு உலகமெங்கும் இதைச் சொல்லி வந்தான். மக்களெல்லோரும் அவனுக்குப் பயந்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/94&oldid=1277015" இலிருந்து மீள்விக்கப்பட்டது