பக்கம்:மாயக் கள்ளன்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


93 சக்கரவர்த்தியாக இருக்க முடியும்? ஆதலால், அவர்களே எலிகளிடத்திலிருந்து காப்பாற்ற நினேத்தான். உடனே அணுவரக்கன் தனது ஆராய்ச்சிக் கூடத்திலுள்ள பத்தாயிரம் விஞ்ஞானிகளையும் கூப்பிட்டான். நீங்கள் ஆயிரக் கணக்கான எலிப்பொறிகளைச் செய்து இந்த மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.

  • சக்கரவர்த்தியே, ஆயிரம் அணுகுண்டும், நூறு ஹைட் ரஜன் குண்டும் செய்வதற்கே நாளெல்லாம் சென்றுவிடுகிறது. அதனுல் எலிப்பொறி செய்ய நேரமில்லேயே’ என்று அவர்கள் சொன்னர்கள்.

அணுவரக்கனுக்கு மேலும் கோபம் வந்தது. இரவெல்லாம் வேலே செய்து எலிப்பொறி செய்யுங்கள். இல்லாவிட்டால் சாட்டையடி கொடுப்பேன்’ என்று அவன் இடிபோலக் கர்ஜித்தான். விஞ்ஞானிகள் பயந்துகொண்டு அவன் உத்தரவிட்டவாறே இரவெல்லாம் எலிப்பொறி செய்யத் தொடங்கினர்கள். பகலிலே அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும் செய்யவேண்டும்: இரவிலே எலிப்பொறி செய்ய வேண்டும். இவ்வாறு இரவு பகலாக ஓய்வில்லாமல் வேலே செய்ததால் விஞ்ஞானிகள் களைத்துப் போய்விட்டார்கள். அவர்களில் பல பேர் வேலை செய்யச் செய்ய ஒவ்வொருவராகக் கீழே விழுந்து இறந்தார்கள். விஞ்ஞானிகளின் கூட்டம் குறைந்துகொண்டே வந்தது. பத்தாயிரம் பேர்கள் ஐயாயிரம் பேர்களாகக் குறைந்து விட்டார்கள். விஞ்ஞானிகள் இப்படி இறக்கவே தினந்தோறும் ஆயிரம் அணுகுண்டுகளும், நூறு ஹைட்ரஜன் குண்டுகளும் செய்ய முடியவில்லே. குண்டுகளின் எண்ணிக்கை குறையலாயிற்று. அதைக் கண்டு விஞ்ஞான பூதத்திற்குக் கோபம் வந்தது. அது பசியால் ஊளையிட்டது. தனக்குக் கிடைக்க வேண்டிய உணவு சரியாகக் கிடைக்காததால் அந்த உணவுக்குச் சரிசெய்ய அனு