பக்கம்:மாயக் கள்ளன்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


95 விஞ்ஞான பூதத்தின் வயிற்றிலே புகை நிறைந்ததால் அதன் வயிறு பலூக்னப் போல உப்பத் தொடங்கிற்று. புகை மேலும் மேலும் அதிகமாக உண்டாயிற்று. பூதத்தின் வயிறும் மேலும் மேலும் உப்பி மல்போல ஆகிவிட்டது. அப்படி வயிறு மலேபோல உப்பியதும் விஞ்ஞான பூதம் ஜிவ்வென்று ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது. அது மிக வேகமாக மேலே மேலே போயிற்று. உலகத்தை விட்டுப் பத்தாயிரம் மைல் தூரம் உயர்ந்து சென்றுவிட்டது. அங்கே போனதும் விஞ்ஞான பூதத்தின் வயிறு டபார் என்று வெடித்து விட்டது. பூதமும் சுக்கு நூருக உடைந்து சிதறியது. வயிறு வெடித்ததும் அதில் அகப்பட்டுக்கொண்டிருந்த அணு வரக்கன் பூமியை நோக்கி விழத் தொடங்கினன். "ஐயோ, பூமியின் மேல் விழுந்தால் தலே சுக்குச் சுக்காகப் போய் விடுமே” என்று அவன் அலறிக் கூவினன். அப்படிக் கூவிக் கொண்டு அவன் கையையும் காலேயும் உதறினன். அவன் கைகள் எதோ ஒரு புட்டியின் மேல் வேகமாக மோதிற்று. அவன் திடுக்கிட்டு எழுந்தான். அப்பொழுதுதான் இவையெல்லாம் கனவு என்று அணுவரக்கனுக்குத் தெரிந்தது. அணுவரக்கன் தனது ஆராய்ச்சிக்கூடத்தில் ஆலோசனே பண்ணிக்கொண்டிருந்தானல்லவா ? அப்படி ஆலோசனை பண்ணும்போது அவன் தூங்கிவிட்டான். பல நாள்கள் அவன் தூங்காமையால் அவனேயும் அறியாமல் தூக்கம் வந்துவிட்டது. தூக்கத்தில்தான் அவன் விஞ்ஞான பூதம் செய்தது போலக் கனவு கண்டான். அணுவரக்கன் கனவிலிருந்து அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தான். அப்படி எழுந்தபோது ஆராய்ச்சிக் கூடத்திலிருந்த சில புட்டிகள் அவனுடைய கைகளில் மோதி உடைந்துவிட்டன. அவற்றிலிருந்த விஷத் திராவகங்கள் சிதறி அவன் கண்களில் விழுந்தன. அதனுல் அவனுடைய கண்கள் குருடாகிவிட்டன.