பக்கம்:மாயக் கள்ளன்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 "ஐயோ! விஞ்ஞானத்தைக்கொண்டு உலகுக்கு நன்மை செய்ய நினைக்காமல் நான் உலகத்தை அடக்கி ஆள நினத் ததால் எனக்கு இந்தக் கதி வந்ததே என்று அவன் அழுது புலம்பிக்கொண்டே இருந்தான். அவனுடைய அழுகை நிற்கவே இல்லை.” இவ்வாறு சொல்லிவிட்டு மாயக்கள்ளன் திரும்பிப் பார்த் தான். மலேயில் பாதி உயரம் வரை எறி வந்திருந்த ஆத்ம ரங்கன் அந்தச் சமயத்தில் கீழே படுத்துத் தூங்கிக்கொண்டிருந் தான். மாயக்கள்ளனுக்கு மேலும் ஒரு வெற்றி கிடைத்தது. அவன் சந்தோஷமாக ஆத்மரங்கனேத் தூக்கிக்கொண்டு பழையபடி மலையடிவாரம் போய்ச் சேர்ந்தான்.