பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிடப்பதைக் கண்டான். கண்களில் அருள் வெள்ளம் ததும்பி நிற்பது தெரிந்தது.

அவர் மீது அவனுக்கு என்றுமில்லாத நம்பிக்கை ஏற்பட்டது. தனக்கு நன்மை தருவதற்காகவே அவர் அந்த இடத்திலே வந்து தோன்றியிருக்கிறார் என்று எண்ணினான்.

குறைவில்லாத நம்பிக்கையோடு, நன்மையே உண்டாகும் என்ற முழு நினைப்போடு அவன் தென்திசையில் மீண்டும் திரும்பித் தன் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றான். அவன் திரும்பிய உடனேயே அந்த முனிவர் மறைந்து விட்டார். ஆனால் மணிவண்ணன் தன் இலட்சியமே எண்ணமாகப் பின்னால் திரும்பிப்பார்க்காமல் சென்றுகொண்டிருந்தான்.

45