பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணவு வகைகள் பரிமாறப்பட்டிருந்தன. வெள்ளித் தொன்னைகளிலே சூப்பும் ரசமும் பாயாசமும் பானகமும் வைக்கப்பட்டிருந்தன. தேவர்களும் தேவதைகளும் வரிசை வரிசையாக இருந்து விருந்துண்டு கொண்டிருந்தார்கள். ஒரு பந்தியிலே இரண்டு இலைகள் ஆளில்லாமல் இருந்தன. அவற்றிலே ஒன்றில் மணிவண்ணனை உட்காரவைத்து மற்றொன்றின் முன் அந்த வனதேவதை உட்கார்ந்து கொண்டாள்.

நன்றாக விருந்துண்டபின், தேவர்களும் தேவதைகளும் மணிவண்ணனைச் சூழ்ந்து நின்று அவன் செய்த வீரச் செயலைப் பாராட்டினார்கள். அவனுக்கு வாழ்த்துக் கூறினர்கள்.

மணிவண்ணன் வன தேவதையை வணங்கி."அம்மா, என்னை விரைவில் அனுப்பி வையுங்கள். போய் இளவரசியைத் துயில் எழுப்ப வேண்டும். அதற்குரிய வழியையும் சொல்லியருளுங்கள்" என்று பணிவோடு கேட்டான்.

"மகனே! இதோ நொடியில் அனுப்பி வைக்கிறேன். எதிரில் இருக்கும் திருக்குளத்தில் ஒரு செம்பு நீர் எடுத்துக் கொண்டு போ. என்னை நினைத்துக் கொண்டு இந்நீரை இளவரசியின் மீது தெளி. உடனே அவள் துயில் நீங்கி

61