உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 7ς

ஆழம், அனைத்தையும் கேள்விப்பட்ட பண்டார சந்நிதி, வேதநாயகம் பிள்ளையை நேரடியாகப் பார்த்து அளவளாவ விரும்பினார்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மாயவரம் சென்று வேதநாயகரைப் பார்த்துப்பண்டார சந்நிதியின் விருப்பத்தை வெளியிட்டார். முன்சிஃப்பைக் குறித்து தேசிகள் எவ்வளவு விவரமாக்கேள்விப்பட்டாரோ, அதே அளவுக்குதேசிகரைப் பற்றி வேதநாயகரும் கேள்விப் பட்டிருந்ததால், அவரைப் பார்க்க முன்சிஃப் விரும்பினார். ஆனால், நீதி மன்றப் பணிகளது பளுகாரணமாக உடனடியாக அவரிடம் சென்று காண முடியாத நெருக்கடி நிலை இருந்தது. அதனால் முன்சிஃப், தனது வர இயலாமையைக் குறித்து செய்யுள் ஒன்றை எழுதி தேசிகருக்கு அனுப்பிவைத்தார் அப் பாடல் இது

'விதியிருந்த பதியெனும் சுப்பிரமணிய தேசிக!

மெய்ஞ்ஞானக் குன்றே! துதியிருந்த நின்புலவன் சொல்வழியே பல்வழியும்

தோன்றும்; நீ என் மதியிருந்தாலி; பிரிந்திடவும் மனம் பொருந்தாய் என

இருந்தேன் வான்கோ முத்திப் பதியிருந்தாய் எனவந்த மாபுலவன் பொய்சொலவும்

படித்தான்் மாதோ

வேதநாயகரின் மேற்கண்ட செய்யுளுக்குரிய கருத்து இது. "திருவாவடு துறை வாழ் தேசிக மெய்ஞ்ஞான மலையே! யாவரும் புகழும் தங்கள் புலவராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொல்வதைக் கொண்டு, எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். புலவர் என்னிடம் ஒரு பொய்யைச் சொன்னார். என்ன என்று அதைத் தெரிவித்து விடுகிறேன்.