பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

மாயா விநோதப் பரதேசி

உண்டாகா என்ற உறுதியான அபிப்பிராயமும் என் மனதில் பலமாக ஊன்றி நின்றுவிட்டன. அதற்கிணங்கவே நான் இப்போது நடந்து வருகிறேன். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ என்றும், எந்த மனிதரிடத்தில் எப்படிப்பட்ட சிரேஷ்டமான யோக்கிய தாம்சம் நிறைந்திருக்கிறதோ என்றும் அஞ்சி என் சிறுமையை உணர்ந்தே நான் இப்போது அற்ப மனிதரிடத்தில் கூட நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டு வருகிறேன். நான் தங்களிடத்தில் வித்தியாசமாக நடந்து கொள்வேனோ? தங்களை நான் இன்று நேற்றா பார்க்கிறேன். தாங்கள் சொல்லுகிறபடி தங்களுக்கும் எனக்கும் ஒத்திட்டுப் பார்த்தால், நான் கேவலம் ஒரு குழந்தைக்கே சமம் என்பதை நான் நன்றாக அறிவேன். இந்தப் போக்கிரிப் பட்டனத்தில் உள்ள அயோக்கியர்களுக்கு எல்லாம் தங்களுடைய பெயர் என்றாலே சிம்ம சொப்பன மல்லவா. இமயமலைக்கு அருகில் உள்ளவர்கள் கூட கும்பகோணம் என்ற பெயரைக் கேட்டால், இந்த ஊரில் இருந்து வரும் மனிதரை விஷம்போல வெறுக்கிறார்கள். அப்படிப்பட்ட என்றைக்கும் மாறாத இழிவையும் அவமானத்தையும் இந்த ஊருக்குத் தேடி வைக்கும் அயோக்கிய சிகாமணிகள் எல்லாம் தங்களுடைய ஆளுகையில் பஞ்சாய்ப் பறந்து போய் விட்டார்களே! எப்படிப்பட்ட திறமை சாலிகளான போலீஸ் இன்ஸ்பெக்டர்களாலும் அடக்க முடியாத பரம துஷ்டர்களும், துன்மார்க்கர்களும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாய்ப் போகும்படி செய்தது தாங்கள் அல்லவா? அந்த விவரம் எல்லாம் எனக்குத் தெரியாதா? அப்படிப்பட்ட போலீஸ் புலியாகிய தங்களிடத்தில் நான் வாலையாட்டத் துணிவேனா? ஒரு நாளுமில்லை. ஆகையால் தாங்கள் இந்த ஏழையின் மேல் தப்பான அபிப்பிராயம் கொள்ளவே முகாந்திரமில்லை. தங்களை நான் அற்பசொற்பமாக மதித்துப் பேசவில்லை. சர்வமும் தெரிந்த சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுளின் முன்னால் நின்று பேசுவதைப் போலவே நான் எண்ணிப் பேசுகிறேன். இது பிரமான மான வார்த்தை. இப்போது என்ன கருத்தோடு தாங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை நான் இன்னமும் ஓர் எள்ளளவுகூட யூகிக்கக் கூடவில்லை. அப்படி இருக்க, நான் எவ்விதமான