பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

மாயா விநோதப் பரதேசி

அப்புறத்தில் பார்த்தார். அவ்விடத்தில் இன்னொரு தோட்டம் காணப்பட்டது. அது பக்கத்துத் தெருவில் இருந்ததும், வடிவம் பாள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததுமான சட்டைநாத பிள்ளையின் இன்னொரு வீட்டின் பின்புறத் தோட்டம் என்ற அடையாளம் நன்றாகத் தெரிந்தது. அந்தத் தோட்டத்தில் எவ்வித மான புதிய கட்டிடமும் காணப்படவில்லை. அவர் ஏறி நின்ற மதில் சுவரின் ஓரமாக அப்புறத்தில் சந்தேகாஸ்பதமான எவ்வித கட்டிடமும் காணப்படவில்லை. மதிலின் அகலமும் சுமார் ஒன்றரை அடிதான் இருந்தது. அதைக் கண்ட இன்ஸ்பெக்டர் அவ்விடத்தில் சம்சயப்படக்கூடிய குறிப்பு எதுவும் இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு கொய்யாமரத்தின் வழியாகக் கீழே இறங்கினார். உடனே மாசிலாமணி, “இந்த மதிலை நான் கட்டியிருப்பதைக் கண்டு எஜமான் ஏதோ சந்தேகங் கொள்ளுகிற மாதிரி இருக்கிறது. இன்ன காரணத்தினால் இந்த மதில் கட்டப்பட்டதென்பதை நான் சொன்னால், உங்கள் சந்தேகம் உடனே விலகிப் போகும்,” என்றான். இன்ஸ்பெக்டர், “ஏன் எதற்காக இந்த மதில் போட்டீர்? பின்பக்கத்துத் தெருவில் இருந்த வீடு இப்போதும் உங்களுக்குத் தானே சொந்தம்? அல்லது, அதை வேறே யாருக்காவது விற்றுவிட்டீரா?” என்றார்.

மாசிலாமணி, “எங்களுக்கு வேண்டும் என்று வாங்கின வீட்டை நான் ஏன் விற்கிறேன்! அதுவுமன்றி என் தமையனார் பேரில் இருக்கும் வீடு நிலம் முதலிய ஸ்தாவர சொத்துக்களை நான் விற்க எனக்கு அதிகாரம் ஏது? நான் விற்றால்கூட, ஒருவரும் வாங்க மாட்டார்களே! இந்தச் சொத்துக்களை எல்லாம் அவர் வருகிறவரையில் நிர்வாகித்து இவைகளில் இருந்து வரும் வருமானத்தை என்னுடைய இச்சைப்படி செலவு செய்து கொள்ளலாம் என்று மட்டும் என் தமையனார் எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்” என்றார்.

இன்ஸ்பெக்டர், “அப்படியானால், இரண்டு வீட்டுக்கும் நடுவில் இருந்த வழியை ஏன் அடைத்தீர்?” என்றார்.

மாசிலாமணி, “பின்பக்கத் தெருவில் உள்ள எங்களுடைய வீட்டை இதுவரையில் காலியாகவே வைத்திருந்தோம். நான் ஜெயிலில் இருந்து வந்த பிறகு அதை வாடகைக்கு விட ஏற்பாடு