பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

மாயா விநோதப் பரதேசி

ஆனவர்களையும் ஏமாற்றிவிடக் கூடியவர்கள். அவர்களைப் பற்றி எதிரிகள் இது வரையில் கொஞ்சமும் சந்தேகப்படவே இல்லை. உங்களுடைய தமயனார் வெளியில் வந்து விட்டதைக் கேட்டவுடனே திகம்பர சாமியார், கண்ணப்பா முதலிய எல்லோரும் பெரும் பீதியடைந்து எந்த நிமிஷத்தில் தமக்கு எப்படிப்பட்ட அபாயம் நேருமோ என்று நினைத்து நிரம்பவும் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள். அப்படி இருந்தபடியே திகம்பரசாமியார் உங்கள் அண்ணனைப் பிடிப்பதற்காக ஏதேதோ யோசனையும் சூழ்ச்சிகளும் செய்து கொண்டிருப்பதோடு, தஞ்சை சூபரின்டென்டெண்டுக்கும் இந்த அண்ணா வையங்காருக்கும் ஓயாமல் ஏதோ தந்தி அனுப்பிக் கொண்டே இருக்கிறாராம். அது நிற்க, அடுத்த வெள்ளிக்கிழமை பட்டணத்தில் நிச்சயதாம்பூலம் மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். வேலாயுதம் பிள்ளை ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வரிசைகளோடு போய் நிச்சயதார்த்தம் முடிக்கப் போகிறாராம். புதன்கிழமை ராத்திரி 6 முதல் வகுப்பு வண்டிகளில் சுமார் 50 ஜனங்கள் பட்டணம் போகப் போகிறார்களாம். சென்னப் பட்டணம் கலெக்டர் பட்டாபிராம பிள்ளையினுடைய மகள் தெய்வ ரம்பை போலவே அவ்வளவு சொகுசாக இருக்கிறாளாம். வடிவாம்பாளைக் காட்டிலும் அந்தப் பெண் அதிக அழகுடையவளாம். அவளுடைய பெயர் மனோன்மணியாம். அவள் பி.ஏ. வகுப்பில் படிக்கிறாளாம். அந்தக் கலெக்டருக்கு ஆண் சந்ததியே இல்லையாம். அவருக்கு இரண்டு லட்சத்துக்குச் சொத்திருக்கிறதாம். அதுவும் கடைசியில் கந்தசாமியைத்தான் சேருமாம்” என்றான்.

மாசிலாமணி, “ஓகோ! அப்படியா சங்கதி அந்தப் பட்டாபிராம பிள்ளை என் அண்ணனைக் கடைசி வரையில் ஏமாற்றி மூன்று நாள் தூங்காமல் கண்விழிக்கச் செய்து கடைசி தினம் அழைத்து வைத்துக் கொண்டு ரகசியங்களை எல்லாம் கிரகித்தான் அல்லவா? அப்போது அவன் செய்த தந்திரம் என்ன என்பது உமக்குத் தெரியுமா? தனக்கு ஒரே பெண் இருப்பதாகவும், அந்தப் பெண்ணை எனக்குக் கட்டிக்கொடுத்துத் தனது சொத்துகளை