பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

மாயா விநோதப் பரதேசி

அனுப்பிரமாணங்கூட ருஜூ இருக்கக்கூடாது. அவ்வளவு தந்திரமாக நாம் காரியங்களை முடிக்க வேண்டும்” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன் சிறது யோசனை செய்தபின், “ஒரு காரியம் எனக்கு நிரம்பவும் உசிதமாகத் தோன்றுகிறது. அந்த திகம்பரசாமியார் சுயேச்சையாக இருக்கையில், நாம் எந்தக் காரியம் செய்தாலும், அவன் அதற்குத்தக்க மார்க்கம் தேடி நம்மை எப்படியாவது பிடித்துவிடுவான். ஆகையால், அவனை நாம் பிடித்து முதல் பலி கொடுத்துவிட்டால், பிறகு மற்றவர்களைப் பிடிப்பது வெகுசுலபமான காரியம். அதுவுமன்றி, மற்றவர்கள் அவ்வளவு அக்கறையாகப் பாடுபட்டு குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும் மாட்டார்கள். நாம் கொண்டு வருவோரை விடுவிக்கவும் அவ்வளவாக முயற்சி செய்யமாட்டார்கள்” என்றான்.

மாசிலாமணி:- அது வாஸ்தவம் தான். அவன்தான் எப்போதும் தக்க பந்தோபஸ்தோடு இருக்கிறான் என்கிறீரே; அவனை நாம் எப்படி முதலில் பிடிக்கிறது?

இடும்பன் சேர்வைகாரன்:- அவன் எப்போதும் பந்தோபஸ்தோடு தான் இருக்கிறான். அவன் இருக்கும் ஜாகையில் எப்போதும், 7, 8 ஜெவான்கள் கத்தி துப்பாக்கிகளோடு பாராக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவன் ஏதாவது ஒரு குறித்த நேரத்தில், எங்கேயாவது வெளியில் போகிறான் என்ற நிச்சயம் ஏற்பட்டால், நாம் ஆள்களோடு மறைந்திருந்து அவனைப் பிடித்துக் கொண்டு வந்துவிடலாம். அவன் வெளியில் போகிறதும் தெரிகிறதில்லை; வருகிறதும் தெரிகிறதில்லை. அவனுடைய ஜாகையில் ஒரு மோட்டார் வண்டியும் ஒரு பெட்டி வண்டியும் இருக்கின்றன. பெட்டி வண்டியில் இருப்பது போல, மோட்டார் வண்டியிலும் மனிதர் - உட்காரும் இடம் மறைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதோ வண்டி போகிறது; எப்போதோ வருகிறது. அதற்குள் இன்னார் இருக்கிறார்கள் என்பது தெரிகிறதில்லை. ஒருமாச காலமாக நான் நேரில் ஒளிந்திருந்தும், ஆள்களை வைத்தும் பார்த்தேன். ஒரு சமயம் நானே ஒரு குடுகுடுப்பாண்டி போல வேஷம் போட்டுக் கொண்டு