பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

107

போய், அவனுடைய பங்களாவிற்குள் நுழைந்து, உள்பக்கத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தேன். இன்னொரு நாள் நான் ஒரு பெரிய மிராசுதார் போல விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு பங்களாவிற்குள் நுழைந்து அவனைக் கண்டு ஒரு கும்பிடு போட்டு பெரும் புளுகாக ஒரு புளுகு புளுகினேன். அதாவது, நான் இருப்பது குத்தாலம் என்றும், அவனுடைய மைத்துனனான குமாரசாமி பிள்ளை எனக்கு ஆப்த நண்பன் என்றும், நான் ஒரு காரியமாக மன்னார் கோவிலுக்கு வந்தேன் என்றும், அவனைப் பார்த்து அவனுடைய குடும்ப கூேடிமச் செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வரும்படி குமாரசாமி பிள்ளை சொன்னதாகவும், அவனுடைய பெரும் புகழையும், நற்குணங்களையும் கேட்டு, அவனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை நெடுநாளாக இருந்தது ஆகையால், அதையும் உத்தேசித்து அவனை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போக எண்ணி வந்ததாகவும் சொன்னேன். அவன் என்னை அத்யந்த பிரமையோடு உபசரித்து எனக்குப் போஜனம் அளித்து நெடுநேரம் வரையில் என்னிடம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்து என்னை அனுப்பி வைத்தான். அப்போது நான் அவனுடைய ஜாகையின் உள் பக்கங்களை எல்லாம் நன்றாகப் பார்த்தேன். அவனுடைய நடவடிக்கைகளையும் குண விசேஷங்களையும் உற்றுக் கவனித்தேன். அவனிடம் நெருங்கி நான் பார்த்ததில், நான் அவன் விஷயத்தில் அதற்கு முன் கொண்டிருந்த பகைமையும், குரோதமும், அருவருப்பும் தானாகவே மாறிப்போய் விட்டன. அவன் பார்வைக்குச் சர்வ சாதாரணமான மனிதனைப் போலக் காணப்பட்டாலும், அவனுக்குள் தெய்விகமான சக்தி ஏதோ இருக்கிறதென்பது நன்றாகத் தெரிகிறது. அவனுக்குள் மறைந்திருக்கும் ஆத்மா சகலமான அம்சங்களிலும் பரிபக்குவமடைந்த ஒரு மகரிஷியின் ஆத்மா என்பது. வைரக்கற்களைப் போல ஜிலுஜிலுவென்று மின்னும் அவனுடைய கண்களில் இருந்து, எளிதில் வெளிப்படுகிறது. அவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் திரிகால ஞானியின் தீர்க்கதரிசனம் போல த்வனிக்கிறது. அவன் தனக்கென்று எந்தக் காரியமும்