பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

மாயா விநோதப் பரதேசி

செய்யப் பிரியப்படுவதாகத் தோன்றவில்லை. உலகத்தில் உள்ள சகலமான ஜனங்களின் துயரத்தையும் துன்பங்களையும் விலக்கும் விஷயத்தில் தன்னால் இயன்ற வரையில் உதவி செய்யவேண்டும் என்ற கொள்கையையும், தான் ஜென்மம் எடுத்திருப்பது அதற்காகத்தான் என்ற உறுதியையும் விடாமல் கடைப்பிடித்தவனாய் இருக்கிறான். தனக்குப் பொருள் தேட வேண்டும் என்றாவது, தனது உடம்பைப் போஷிக்க வேண்டும் என்றாவது அவன் கொஞ்சமும் கவலைப்படுவதாகவே தோன்றவில்லை. அவனுடைய சம்சாரமும் அவனைப் போலவே பெருத்த தத்துவ ஞானியாக இருக்கிறாள். அதுவுமன்றி, அவர்கள் இருவரும் தங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கவலையே கொண்டவர்களாகத் தோன்றவில்லை. தாங்கள் எவ்வளவு காலம் இந்த உலகில் ஜீவித்திருக்க வரம் வாங்கி வந்திருக்கிறோமே அவ்வளவு காலம் எப்படியும் இருப்போம் என்றும், பிறருக்கு உதவி செய்வதில் தங்களுடைய உயிர் போனால் கூட அது ஒரு பொருட்டல்ல என்றும், அவர்கள் எனக்கெதிரில் இரண்டு மூன்று தடவைகள் சொல்லிவிட்டார்கள். அவர்கள் போஜனம் செய்வதும் நிரம்பவும் மிதமாகத்தான் இருக்கிறது. அவர்கள் எப்போது போஜனம் செய்கிறார்கள், எதைப் போஜனம் செய்கிறார்கள் என்ற விவரம் அவர்களோடு இருப்பவர்களுக்குக்கூடத் தெரிகிறதில்லை. நான் வெகுநேரம் வரையில் அவர்களோடு இருந்து பழகிவிட்டுக் கடைசியில் வந்துவிட்டேன். அவர்கள் உலகத்தில் யார் மீதும் பகையாவது, பற்றாவது வைத்திருப்பவராகவே தோன்றவில்லை. உலகத்தில் அக்கிரமமான வழிக்குப் போகாமல் ஒழுங்காக நடக்கும் மனிதர் யாராக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் பந்துக்கள்தான். அக்கிரமம், துன்மார்க்கம், துஷ்டத்தனம் முதலியவை உடையவர்கள் அவர்களுக்குப் பகைவர்கள். மற்றபடி யாராக இருந்தாலும், அவர்களுக்கு வித்தியாசம் கிடையாது. அந்தக் கண்ணப்பாவே ஏதாவது துன்மார்க்கமான காரியத்தில் பிரவேசிப்பானானால், அவனுக்குக்கூட, அவர்கள் விரோதியாகி விடுவார்கள். அதுபோல, நீங்கள் நல்ல வழியில் நடந்து, பிறர் உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்தால், அவர்கள்