பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

113


மாசிலாமணி:- நான் இதுவரையில் பேசிய குறிப்புகளில் இருந்து, என்னுடைய கருத்து இன்னதென்பதை நீர் இன்னமும் கிரகித்துக் கொள்ளவில்லையா?

இ. சேர்வைகாரன்:- ஒருவிதமாகக் கிரகித்துக் கொண்டேன். இருந்தாலும் நீங்கள் உங்கள் வாயால் சொல்லுகிறதுதானே.

மாசிலாமணி:- உம்முடைய ஆள்களில் இரண்டொருவர் இதற்கு முன் ரயில்வே லைன் வேலை செய்தவர்கள் என்று நீர் முன்னொரு தடவை சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

இ. சேர்வைகாரன்:- ஓகோ! சரி; இப்போது நிச்சயமாகத் தெரிந்தது. அந்த போட்மெயில் போவதற்கு முன், எங்கேயாவது ஓரிடத்தில் தண்டவாளத்தைப் பெயர்த்து வைக்கலாம் என்பது உங்களுடைய யோசனை போல் இருக்கிறது.

மாசிலாமணி:- ஆம்; ஆனால், நீங்கள் தண்டவாளத்தை எடுக்கும் இடம் சாதாரணமான இடமாய் இருக்கக் கூடாது. வண்டிகள் கீழே விழுந்தால் ஜனங்கள் மறுபடி உயிரோடு மீண்டு வர முடியாமல் போய்விட வேண்டும். அப்படிப்பட்ட இடமாகப் பார்த்துத் தண்டவாளத்தை எடுக்க வேண்டும். ஆம்; அப்படிச் செய்யலாம். சிதம்பரம் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் கொள்ளிடம் என்ற பெரிய ஆறு போகிறதல்லவா, அந்த ஆற்றில் இப்போது பிரமாதமான வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறதாக, நான் சமீபகாலத்தில் பத்திரிகைகளில் படித்தேன். அந்த ஆற்றுப் பாலத்தில், முக்கால் பங்கு தூரம் விட்டு அதற்கு அப்பால் உள்ள தண்டவாளம் ஒன்று, அல்லது, இரண்டைப் பெயர்த்து எடுத்துவிட்டால், அதுவே போதுமானது. அந்த முக்கால் பங்கு தூரத்திற்குள் முதல் வகுப்பு வண்டிகள் அவசியம் இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும், இஞ்சின் முதலிய முன் வண்டிகள் அதிமிதமான வேகத்தோடு போய் விழும்போது பின் வண்டிகளையும் இழுத்துக் கொண்டே போகும். சாதாரணத் தரையாக இருந்தால், முன் வண்டிகள் விழுந்த இடத்தில் கவிழ்ந்து நின்றுவிடும். பின் வண்டிகள் கொஞ்சம் அப்புறம் இப்புறம் நகர்ந்து கீழே விழுந்துவிடும். அந்த ஆற்றில் கனத்த வெள்ளம் போகிறது. ஆகையால் இஞ்சின் முதலிய முன் வண்டிகள் வெள்ளத்தில் இழுத்துவிடுவதுமா.வி.ப.I-9