பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

மாயா விநோதப் பரதேசி

நிச்சயம். நம்முடைய பகைவர்கள் எல்லோரும் கூண்டோடு கைலாசம் போவது நிச்சயம். அதன் பிறகு சென்னைப் பட்டணத்தில் அந்தப் பட்டாபிராம பிள்ளை இருக்கிறான். அவன் ஒருவன் தானே. அவனைத் தொலைப்பது ஒரு பெரிய காரியமல்ல. அவனுடைய மகளை அபகரித்துக் கொண்டு வருவதும் ஓர் அரிய காரியமல்ல. முக்கியமாக அந்தப் பரதேசி நாய் ஒழிந்ததென்றால், அதன் பிறகு நமக்கு எவ்வித பயமுமில்லை. நம்முடைய அண்ணன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கக் கூடியவன் அவன் ஒருவனே. மற்ற சாதாரணப் போலீசாரால் அந்தக் காரியம் இயலாது. ஆகையால், அவன் தொலைந்தால் அண்ணன் பத்திரமாக இருக்கலாம். அவரைப் பற்றி நாம் கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதே இல்லை — என்றான்.

இ. சேர்வைகாரன்:- (சிறிது நேரம் யோசனை செய்த பிறகு) நீங்கள் சொல்லுகிற யோசனை ஒரு விதத்தில் நல்ல யோசனை யாகத்தான் தோன்றுகிறது. அப்படித்தான் செய்ய வேண்டும். என்று நீங்கள் ஆசைப்பட்டால் நான் அதை நிறைவேற்றி வைக்கத் தடையில்லை. ஆனால் அதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவர்கள் புதன்கிழமை இரவு வண்டியில் போகப் போகிறார்கள் என்று தான் நம்முடைய ஆள் சொன்னான். அது போட்மெயிலாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவனுடைய யூகமேயன்றி வேறல்ல. அவர்கள் அந்த வண்டியில் போகாவிட்டால், நாம் செய்வதால், அவர்களுக்கு யாதொரு கெடுதலும் இல்லாமல் போய்விடும். அன்றைய தினம் போகும் போட்மெயில் விழுவதனால், நிரபராதியான வேறே ஜனங்கள் மாண்டும் காயப்பட்டும் போவார்கள். அதனால், வீண் கூக்குரல் அதிகரிக்கும்; காவல் அதிகரிக்கும்; அதன் பிறகு மறுபடியும் நாம் அந்தக் காரியத்தைச் செய்வது சாத்தியம் இல்லாமல் போய்விடும். ஆகையால் நாம் அவர்கள் போகும் வண்டி இன்னது தான் என்பதை முதலில் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்து கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அவர்கள் ஏறிப்போகும் ஆறு முதல் வகுப்பு வண்டிகளை இஞ்சினுக்குப் பக்கத்தில் தான் கோர்க்கிறார்கள் என்பது என்ன நிச்சயம். பின்னால் கார்ட்