பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

119


இ. சேர்வைகாரன்:- இவ்வளவு தூரம் யோசனை செய்து காரியத்தை முடிக்க எத்தனிக்கையில் விஷப்பல் இல்லாத பாம்பையா வாங்குகிறது. அதை எல்லாம் நான் யோசிக்காமலா இந்த ஏற்பாட்டை உங்களிடம் தெரிவிப்பேன். இதோ பக்கத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவிலில் ஒரு பாம்புப் பிடாரன் இருக்கிறான். அவன் எனக்கு ஒருவிதத்தில் தெரிந்தவன். அவனிடம் நான் ஏற்கனவே போய் இந்த விஷயமாகப் பேசிவிட்டு வந்திருக்கிறேன். அவன் பாம்பு பிடிப்பதில் நிரம்பவும் கெட்டிக்காரன். மகா கொடுமையான விஷமுடைய சில கருநாகங்கள் அங்கே உள்ள காட்டில் இருக்கின்றனவாம். அந்த ஜாதிப்பாம்பு அதிக பருமனாக இருக்காதாம். இரண்டு விரல் பருமன், ஒரு முழ நீளம் இருக்குமாம். பார்ப்பதற்கு கருப்பாகவும் பளபளப்பாகவும் இருக்குமாம்; அவற்றின் மூச்சுப்பட்டால்கூட மனிதர் உடனே மயங்கி ஸ்மரணைதப்பிப் போய்விடுவார்களாம். அந்தப் பாம்புகள் ஆச்சரியகரமான வேகமும் சுருசுருப்பும் உடையவை களாம். அவைகளுக்கு மனிதரைக் கண்டால் ஆக்கிரோஷமும் மூர்க்கத்தனமும் அதிகமாகக் கிளம்புமாம். பெட்டியைத் திறக்கும் முன் அவைகள் பட்சிகள் பறப்பது போல குபிரென்று கிளம்பி வெளியில் வந்து பக்கத்தில் உள்ள மனிதரைக் கடித்துவிட்டுப் போய்விடுமாம். அப்படிப்பட்ட பாம்புகளில் 4 பாம்புகள் பிடித்துத் தருவதற்கு அவன் இருபது ரூபாய் பணம் கேட்டான். அதை முதல் நாள் கொடுத்தால், மறுநாள் காலையில் பாம்புகளைப் பிடித்துக் கொடுப்பதாக அவன் ஒப்புக் கொண்டான். அந்தப் பாம்புகளை நாம் கொடுக்கும் பெட்டியில் அவனே வைத்துப் பத்திரப்படுத்திக் கொடுத்துவிடுவான். பெட்டியை நாம் அப்படியே வாங்கி அனுப்ப வேண்டியது ஒன்றே நாம் செய்ய வேண்டிய காரியம்.

மாசிலாமணி:- அது சரிதான். அந்த மனிதனை நாம் நம்பலாமா? இதுவோ பிரமாதமான காரியம். நாளைக்கு அந்தப் பெட்டி திகம்பரசாமியாரிடம் போகிறதாகவே வைத்துக் கொள்வோம். பாம்புகள் அவனைக் கடிக்கின்றனவோ இல்லையோ அது வேறே விஷயம்; ஆனால், யாரோ பாம்பை ஒரு பெட்டியில் வைத்தனுப்பினார்கள் என்ற சங்கதி எப்படியும்