பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

127

அந்தப் பெண்ணைக் கொண்டுவர வேண்டும் என்கிறீர்களே! அவளைக் கொண்டு வந்து கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உண்டா?

மாசிலாமணி:- அதெப்படி முடியும்? நாம் திருட்டுத்தனமாகவும் பலவந்தமாகவும் கொண்டுவரப் போகிறோம். அந்தப் பெண்ணை நாம் கொண்டு வந்தோம் என்பதே எவருக்கும் தெரியக்கூடாது. கலியானம் என்றால் பந்து ஜெனங்கள் அறிய பகிரங்கமாகச் செய்ய வேண்டிய சடங்கல்லவா. அப்படி இருக்க, அந்தப் பெண்ணைக் கொண்டு வந்து ஏகாங்கியாக வைத்துக் கொண்டு நாம் கலியாணம் செய்து கொண்டால், ஜனங்கள் அதைப்பற்றி சந்தேகிப்பார்கள். அது பற்பல கேள்விகளுக்கு இடங்கொடுக்கும். அதற்கெல்லாம் நாம் எவ்விதமான சமாதானம் சொல்லுகிறது? முதலில் அந்தப் பெண்ணே வாயை மூடிக்கொண்டு சாந்தமாக கலியாணத்தை நடத்திக் கொள்வாளா? ஒரு நாளும் அவள் இணங்கி வரமாட்டாள்; அல்லது நாம் முதலில் பெண்ணை அபகரித்து வந்து ஒளிய வைத்துக் கொண்டு தந்திரமாக அவளுடைய தகப்பனிடம் போய்ப் பேசி, எனக்கு அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க இணங்கினால், பெண் இருக்கும் இடத்தை நான் காட்டுகிறேன் என்று சொன்னாலும், அவன் நமக்கு மேல் அதிக தந்திரம் செய்வான். நம்முடைய பிரியப்படி செய்வதாக முதலில் ஒப்புக் கொண்டு பெண்ணை அடைந்த பிறகு நம்மை ஏமாற்றி விடுவான். ஜெயில் தண்டனை அடைந்தவன் என்ற இழிவு எனக்கு ஏற்பட்டிருக்கையில், அவன் பகிரங்கமாகத் தன்னுடைய பெண்ணை எனக்குக் கட்டிக்கொடுப்பானா? ஆரம்பத்தில் இருந்தேதான் நமக்கும் அவனுக்கும் ஜென்மப் பழியாய்ப் போய்விட்டதே; அப்படி இருக்க, அவன் தன்னுடைய பெண் போனாலும் போகட்டும் என்று விட்டு விடுவானே அன்றி, அவளை எனக்கு மாத்திரம் கட்டிக்கொடுக்கவே மாட்டான். ஆகையால் கலியாணம் என்ற எண்ணத்தையே மூட்டையாகக் கட்டி துரத்தில் வைத்துவிட வேண்டியது தான்.

இ. சேர்வைகாரன்:- இந்தச் சங்கதி எல்லாம் எனக்குத் தெரியாதா? பெண்ணும், தகப்பனும் கலியாணத்திற்கு இணங்க