பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

மாயா விநோதப் பரதேசி

மாட்டார்கள் என்பதும், ஜனங்கள் கேள்விகள் கேட்பார்கள் என்பதும் எனக்குத் தெரிந்த விஷயம். நான் கருதியது வேறு மாதிரியானது; எப்பாடுபட்டாவது பெண்ணை நாங்கள் கொண்டு வந்து சேர்க்கத்தான் போகிறோம். பெண் நிரம்பவும் அழகாக இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். அவளைக் கண்டவுடன் உங்களுக்கு எப்படியும் பிரியம் உண்டாகும் என்றே நினைக்கிறேன். அவளை நீங்கள் எப்படியும் உங்கள் வசப்படுத்திக் கொள்ளத்தான் போகிறீர்கள். அப்படி வசப்படுத்திக் கொண்டு கொஞ்சகாலம் இருந்த பிறகு, அவளை அனுப்பிவிட உங்களுக்கு மனம் வராதென்றே நினைக்கிறேன். அப்படி இருக்க, அவளை நீங்கள் துரத்திவிடுவது எப்படி? அப்படியே நீங்கள் துரத்தி விட்டாலும், அவள் தன்னுடைய தகப்பனிடம் போய் எல்லாச் சங்கதியையும் வெளியிட்டால், அவர்கள் உங்கள் மேல் வியாஜ்ஜியம் தொடர்ந்தாலும் தொடரலாம், அல்லது, அந்தப் பெண் உங்களிடம் வந்து இருந்ததென்ற விஷயத்தையே அவர்கள் அடியோடு மறைத்து, அவளை வேறே யாருக்காவது கட்டிக் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள். அதுவுமன்றி, அந்தப் பெண்னை நாம் இங்கே கொண்டு வந்தபின், நீங்கள் அவளிடம் போய், உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற எத்தனித்தால், அவள் அதற்கு சுலபத்தில் இடங்கொடுக்காமல் முரட்டுத்தனம் செய்தாலும் செய்யலாம். ஒருவேளை அவள் சாப்பிடாமலேயே பட்டினி கிடப்பாள்; அல்லது, எந்த வகையிலாவது அவள் தன்னை மாய்த்துக் கொள்ள வழி தேடினாலும் தேடுவாள். அதற்கெல்லாம் இடங்கொடுக்காமல் நாம் ஒரு காரியம் செய்து விடுவது நலம் என்று நினைக்கிறேன். அந்தப் பெண்ணின் மனசுக்கு விரோதமாக அவளை அடைவதைவிட, அவள் ஒரு விதமாக இணங்கி வரும்படி செய்து காரியத்தைச் சாதிப்பது உசிதமானதென்று நினைக்கிறேன். என்னவென்றால் நாம் பெண்ணைக் கொண்டு வந்து இரண்டொரு நாள் சும்மா வைத்திருக்கிறது. அந்தக் காலத்தில் நீங்கள் அவளிடம் நம்முடைய உள்கருத்தை வெளியிடாமலும், அவள் சந்தேகப்படாத படியும் நடந்து கொண்டு, அவளுடைய பிரியத்தை உங்கள் பேரில் திருப்ப முயற்சி செய்து பாருங்கள். அது முடியாவிட்டால், அவள்