பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

133

இ. சேர்வைகாரன் :- எஜமான் இப்போது அனுப்பினாலும் போகத் தடையில்லை. முதலில் திகம்பரசாமியாருடைய வேலையை முடிக்கச் சொன்னால், நாளைக்கு மறுநாள் வரையில் இங்கே இருந்து அதன் முடிவைப் பார்த்துக் கொண்டு போகிறேன். திகம்பரசாமியார் மாண்டு போனால், நிச்சயதார்த்தம் இப்போது நடக்காது. இவர்கள் அதை சில தினங்கள் ஒத்தி வைப்பது நிச்சயம். எல்லாவற்றிற்கும் இவர்கள் பட்டணம் வருவதற்குள், அதை முடித்துவிட்டால் நலம் என்று நினைக்கிறேன்.

மாசிலாமணி:- இந்த இரண்டு தினங்களில் இந்தப் பரதேசியின் வேலையை முடித்துவிட்டு அன்றைய தினமே நீர் ஆள்களோடு பட்டணம் போம். மோட்டார் வண்டியை ஒருவன் வசம் அனுப்புகிறேன். அங்கே போய் எப்படியாவது முயற்சி செய்து நிச்சயதார்த்தத்துக்குள் பெண்ணை அபகரித்துக் கொண்டு வந்துவிடும்.

இ. சேர்வைகாரன்:- அவர்கள் புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் இருப்பதாகக் கேள்வி. பங்களா ஒதுக்குப்புறமான ஒர் இடத்தில் இருக்கும். இரவில் நாலைந்து டலாயத்துகள் காவல் இருப்பார்கள். பங்களாவுக்குள் அப்பன் மகள், நாலைந்து வேலைக்காரிகள் அவ்வளவு பேர்தான் இருப்பார்கள். நாங்கள் சுமார் 25 பேர் போய், எல்லோரையும் அடித்துப் போட்டு விட்டு, பெண்ணைத் துக்கி மோட்டாரில் வைத்துக் கொண்டு வந்து விடுகிறோம். ஆள்கள் ரயிலில் வந்து விடட்டும். நிச்சயதார்த்த தினத்திற்குள், காரியம் முடியாவிட்டால், கந்தசாமி கொடுத்தது போலவும் கலெக்டர் கொடுத்தது போலவும், மன்னார். குடியாருக்கு இரண்டு தந்திகள் கொடுத்து, பெண் மாதவிடாய் ஆகிவிட்டதால், நிச்சயதார்த்தம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், தேதி பின்னால் அறிவிக்கப்படும் என்றும், அது வரையில் யாரும் புறப்பட்டுவர வேண்டாம் என்றும் தெரிவித்து விடுகிறேன். அதே தினம் உங்களுக்கும் ஒரு விவரமான தந்தி அனுப்புகிறேன். அதில் நான் பெயர்களையே குறிப்பிடாமல் பூடகமாக சங்கதிகளைத் தெரிவிக்கிறேன். அதன்படி நீங்கள் யாரையாவது மன்னார்கோவிலுக்கு அனுப்பி அங்கே இருந்து பட்டணத்தில் உள்ள கந்தசாமிக்கும் கலெக்டருக்கும் இரண்டு