பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

மாயா விநோதப் பரதேசி

பெற்றது, அதன் பிறகு திகம்பரசாமியார் தபால்காரனாக வேஷத்தரித்து வந்து தனக்குக் கடிதம் கொடுத்து எச்சரித்துப் போனது, கலியான தினத்தன்று தான் கூரைத் திறப்பின் வழியாக மேலே ஏற்றப்பட்டு வெளியேறி மோட்டார் வண்டியில் அமர்ந்து கண்ணப்பாவிடம் சென்றது முதலிய பயங்கரமான காட்சிகளின் நினைவெல்லாம் தோன்றித் தோன்றி மறைந்தது. ஆதலால், அவளது உடம்பு அடிக்கடி திடுக்கிட்டு நடுங்கியது. முகம் பயத்தினால் வெளிறடைந்து விகாரப்பட்டது. மயிர் சிலிர்த்து நிமிர்ந்து நின்றது. அந்த மடவன்னத்தின் மனம் முழுதும் அவ்வாறு இந்த இடத்தில் இல்லாமல் வேறு பல இடங்களில் எல்லாம் சென்று அலைந்து திரிந்து மாறி மாறித் துன்பமும் துயரமும் திகிலும் கொண்டதாய் இருந்தது. ஆனாலும், அவளது கைகள் மாத்திரம் தாமாகவே புடவையைத் தைத்துக் கொண்டிருந்தன. கண்கள் தையலை நிரம்பவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளது உடம்பு ஸ்தம்பித்து அசைவற்று சித்திரப்பதுமை போலக் காணப்பட்டது. பழைய சம்பவங்களின் நினைவுகளைத் தொடர்ந்து சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பி வெளிப்பட்ட செய்தியும், தாம் இனி எச்சரிப்பாக இருக்க வேண்டும் என்று திகம்பரசாமியார் கண்ணப்பாவிடம் சொல்லி அனுப்பிய செய்தியும் அவளது செவிகளில் கணீர் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றின. நிரம்பவும் கண்ணியமான பதவியில் சகலமான செல்வத்தோடும் இருந்து வந்த சட்டைநாத பிள்ளை என்றைக்கும் நீங்காத இழிவை அடைந்து தஞ்சையில் கைதியின் விலங்கோடு எண்ணெய்க்குடம் தூக்கி ஜனங்களின் இடையில் செல்ல நேர்ந்த அவமானத்தை ஒருகாலும் மறக்க மாட்டார் என்றும், அவர் மகா கொடிய துஷ்டராகையால் அவர் திகம்பர சாமியாரிடத்திலும், தங்களிடத்திலும் எப்படியும் பழிவாங்க எத்தனிப்பார் என்றும், அதனால் கண்ணப்பா முதலிய அரிய மனிதர்களுக்கு எந்த நிமிஷத்தில் எவ்விதமான பொல்லாங்கு நேருமோ என்றும் அந்த மடமயிலாள் எண்ணி எண்ணி நிலை கலங்கி ஆவிசோர உட்கார்ந்து நெடுமூச்செறிந்து கொண்டிருந்தாள். அப்போது அவளது கண்கள் தையலை மாத்திரம்