பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

143

அதைக் கேட்ட மற்றவர் சந்தோஷமாகப் புன்னகை செய்து, “ஒஹோ! நீ இப்படி எல்லாம் சாமர்த்தியமாகப் பேசினால், உன்னை தண்டிக்காமல் நான் விட்டுவிடுவேன் என்று எண்ணிக் கொண்டாயா? நீ யாதொரு குற்றமும் செய்யவில்லை என்ற உறுதியை வைத்துக் கொண்டு பேசுவதும் தவறு; உன்னோடு எப்போதும் இருந்து பேசிப் பலவிதமாக நெருங்கிப் பழகிய ஒரு மனிதரை நீ முற்றிலும் முகமறியாதவர் போல மதித்து அன்னிய மனுஷி போல நடந்து கொள்வது சாதாரணமான குற்றமா? அதற்குத் தக்க தண்டனை இதுதான்” என்று கூறிய வண்ணம் தமது முகத்தை நீட்டி அவளது கன்னத்தில் ஒரு முத்தங் கொடுத்த பின் தமது கைகளை எடுக்கவே, அதைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த பெண்மணி, தனது ஆருயிர் நாயகனான கண்ணப்பாவே தனக்கருகில் வந்து நின்றதைக் கண்டு, உடனே வெட்கித் தலை குனிந்தவளாய், “ஆகா! என் கண்ணம்மாவின் சாமர்த்தியமே சாமர்த்தியம்! கொஞ்சங்கூட அடையாளந் தெரியாத படி குரலை மாற்றிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் என்னை ஏமாற்றி விட்டீர்களே! யாரோ பெண்பிள்ளை என்றல்லவா நான் கடைசி வரையில் எண்ணிக் கொண்டிருந்தேன்” என்று கூறிய வண்ணம் தனது கையில் இருந்த புடவையை ஒரு பக்கமாகப் பாயின் மீது வைத்து விட்டு எழுந்து நாணத்தோடு குனிந்து நின்றாள்.

உடனே கண்ணப்பா அந்த இடத்திற்கருகில் போடப்பட்டிருந்த வழுவழுப்பான விசிப்பலகையண்டை வடிவாம்பாளை அழைத்துக்கொண்டு சென்று, அதன்மேல் உட்கார்ந்தான். அந்த விசிப்பலகையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய சன்னகாரைத் துண்கள் இருந்தன. அந்த விசிப்பலகையின் மீது பெருத்த பெருத்த திண்டுகள் பல கிடந்தன. கண்ணப்பா இரண்டொரு திண்டுகளை வைத்துத் தலைப் பக்கத்தில் இருந்த துணண்டை வைத்து அதன்மேல் “அப்பாடா” என்று சாய்ந்து, கால்களை நீட்டி எதிர்ப் பக்கத்தில் இருந்த துணில் உதைந்து கொண்டான். வடிவாம்பாள் கரைபுரண்டு ஒடிய வாத்சல்யத்தோடு அவனது கால் பக்கத்தில் நின்று, “ஏது என் கண்ணம்மாவுக்கு இன்று இவ்வளவு அலுப்பு! வெயிலில் அதிக தூரம் போய் அலைந்துவிட்டு வந்தீர்கள் போலிருக்கிறது! முகம் நிரம்பவும்