பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

145

சங்கடப்படுவாய் என்று நினைத்தே நான் உன் கண்களைப் பொத்தினேன். அப்படிப் பொத்தினால், யாரோ ஒருவர் வந்திருக்கிறதாக நீ நினைத்துக் கொள்ளுவாயே அன்றி, நான் வந்திருப்பதாக எண்ணி அதிக திகில் கொள்ள மாட்டாய் அல்லவா. நான் உன் கண்களைத் திறந்து விடுவதற்குள் வேறிடத்தில் சென்றிருந்த உன்னுடைய சுய உணர்வும் கவனமும் நன்றாகத் திரும்பி விடும் என்று நினைத்தே நான் அப்படிச் செய்தேன். நான் உன் கண்களைப் பொத்தியதிலும், உன் மனசில் பயமும் குழப்பமும் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அப்படிச் செய்யாமல் நான் திடீரென்று உனக்கெதிரில் வந்தால், உன்னுடைய திகிலும் சஞ்சலமும் பன்மடங்கு அதிகமாக இருக்கும் ஆகையால், உனக்கு ஏற்பட இருந்த பெரிய துன்பத்தை இந்த அற்பமான துன்பத்தால் விலக்கினேன்” என்று கூறிய வண்ணம் அவளது முதுகையும், கன்னத்தையும் அத்யந்தப் பிரேமையோடு தடவிக் கொடுத்தான். அவனது சொற்களைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்த பெண்மணி, “ஒகோ! அப்படியா சங்கதி! என் கண்ணம்மாவின் பிரியத்துக்கு இந்த ஈரேழு பதினான்கு லோகமும் ஈடாகுமா இப்படி என் உயிர்க்குயிராகவும் ஜீவதாரக் கடவுளாகவும் இருக்கிற தங்களுக்கும், அப்பா அம்மா முதலியோர்க்கும், அந்தத் துஷ்டன் சட்டைநாத பிள்ளையால் ஏதாவது கெடுதல் நேரிடுமோ என்ற கவலை தானாகவே என் மனசில் தோன்றி என் நினைவை எல்லாம் கவர்ந்து கொண்டது. எப்பேர்ப்பட்ட கடுமையான காவலிலிருந்து தந்திரம் செய்து தப்பித்துக் கொண்டு வந்து ஒளிந்து கொண்டிருக்கிற அந்தத் துஷ்டன் தன்னை மானபங்கப்படுத்திய மனிதர்களுக்கெல்லாம் ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைப்பது சகஜமே. நாம் எல்லோரும் நம்முடைய உயிர்த் தெய்வம் போல மதித்து வரும் நம்முடைய சுவாமியாரை அந்தத் துஷ்டன் ஒரு நாளும் மறக்கவே மாட்டான். ஆகையால், யானைக்கும் அடிசறுக்கும் என்ற நியாயப்படி, அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், இராப்பகல் எவ்வளவோ எச்சரிப்பாக இருந்தாலும்,

அவன் ஏதாவது தந்திரம் செய்து அவரை உடத்திரவிக்க முயற்சி மா.வி.ப.1-11