உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

மாயா விநோதப் பரதேசி

எனக்கு இன்னமும் விளங்கவில்லை. பலகாரம் சாப்பிடும் விஷயத்தில், ஸ்திரீகள் புருஷரோடு சாப்பிடக் கூடாது என்று எந்த சாஸ்திரம் சொல்லுகிறதோ தெரியவில்லையே!

வடிவாம்பாள்:- (வேடிக்கையாக நகைத்து) சாஸ்திரங்கள் பல காரத்தை மாத்திரமா குறித்துச் சொல்லும். அப்படி இல்லை. உத்தம ஜாதி ஸ்திரிகள் தங்களுடைய பசி, தாகம், தேகப்பிணி முதலிய எந்த விதமான உபாதையையும் புருஷருக்கு எதிரில் நிவர்த்தித்துக் கொள்வதும் கூடாது. அப்படிப்பட்ட பாதைகள் ஸ்திரீகளுக்கு உண்டாகின்றனவா என்பதாவது, அதை அவர்கள் எப்போது நிவர்த்தி செய்து கொள்ளுகிறார்கள் என்பதாவது புருஷருக்குத் தெரியவே கூடாது. பாதை என்றால், பஞ்சேந்திரியங்களாலும் ஸ்திரீகளுக்கு ஏற்படக்கூடிய சகலமான உபாதைகளும் அதற்குள் அடங்கியவைகளே. தேவர்களுக்கு எப்படிப் பசி, தாகம், பிணி முதலியவை இல்லை என்று நாம் கருதுகிறோமோ, அதுபோல, ஸ்திரீகளும் புருஷர்களால் கருதப்பட வேண்டும். அந்த விதமாக ஸ்திரீகள் நடந்து கொண்டால், அவர்களுக்கும் சுகிர்தம், அதனால் புருஷர்களுடைய மனசிலும் நிம்மதியும் ஆனந்தமும் உண்டாகும். அப்படி உண்டாகும் நிலைமையே நீடித்து சாசுவதமாக நிற்கக் கூடியது. இப்போது தாங்கள் பிரியப்படுகிறீர்கள் என்று நான் உங்களோடு கூட உட்கார்ந்து உண்ணத் தொடங்கினால், அதனால், இப்போது நீங்கள் மிகுந்த சந்தோஷம் அடைவீர்கள் என்பது நிச்சயமானாலும், இது நீடித்து நிற்காது. இதனால் பற்பல கெடுதல்கள் உண்டாவதோடு, ஸ்திரீகளிடத்தில் புருஷருக்கு நீடித்து நிற்க வேண்டிய சாசுவதமான பற்றும் பாசமும் சரியானபடி ஏற்படாமல் குறைவுபட்டுப் போகும். நீங்கள் எங்களுக்கு இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சமத்துவம் கொடுத்துக் கொண்டே போனால், அதற்கு ஓர் எல்லை இராது. படிப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் சமத்துவம் கொடுத்துக் கொண்டே போக நேரும். முடிவில் அது இருவருக்குள்ளும் அதிருப்தியையும், அருவருப்பையும், வேற்றுமையையும், சச்சரவையும், துன்பங்களையும், துயரத்தையும் உண்டாக்கிக் கொண்டே போகும். ஸ்திரீகள்