பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

மாயா விநோதப் பரதேசி

சென்னப் பட்டனம் போயிருந்த காலத்தில் நல்ல நல்ல வைதிகர்கள் எல்லாம் காப்பி ஓட்டலுக்குள் போய் சங்கை இல்லாமல் குடித்துவிட்டு வந்ததை நான் என் கண்ணால் கண்டேன். பிறருடைய கண்ணுக்கெதிரில் சாப்பிட்டால், கண் திருஷ்டி தோஷம் வந்துவிடும் என்று சொல்லி, இதுவரையில் எவ்வளவோ ஜாக்கிரதையாகவும் ஒழுங்காகவும் நடந்து வந்தவர்கள் எல்லாம் அடியோடு மாறிவிட்டார்கள். ஒரே ஜாதியைச் சேர்ந்த மனிதர்களில் ஒருவர் கொஞ்சம் மட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தால், அவரை மற்றவர் தம்மோடு கூட வைத்துக் கொண்டு போஜமை செய்வதில்லை என்ற கட்டுப்பாடு பட்டிக்காடுகளில் இன்னமும் இருந்து வருகிறதே. பட்டணங்களில் காப்பிக் கடைகளில் அந்த விதிகள் எல்லாம் போன இடத் தெரியாமல் பறந்து போகின்றன. இங்கிலீஷ் படிப்பும், காப்பிக் கடைகளும் எப்படிப்பட்ட மனிதர்களையும் புது மனிதர்களாக மாற்றிவிட்டன. எச்சில், விழுப்பு, தீட்டு என்ற எந்த விஷயத்தையும் ஜனங்கள் பொருட்படுத்துவதையே அடியோடு விட்டுவிட்டார்கள். ஒரு நாள் நான் ஹைகோர்ட்டுக்கு வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். நம்முடைய ஊரில் உள்ள ஒரு சாஸ்திரியின் பிள்ளை அங்கே வக்கீலாக இருக்கிறார். அவர் ஒரு மூலையில் இருந்து கையில் ஒரு சிகரெட்டை வைத்துக் குடித்துக் கொண்டு நின்றார்; என்னைக் கண்டவுடன் அதை எறிந்துவிட்டுக் கையை இடுப்புத் துணியில் துடைத்துக் கொண்டார். நான் அதைக் கவனிக்காதவன் போல இருந்துவிட்டேன். அவர்தான் அப்படி இருந்தார் என்றால் பக்கத்து ஊரில் உள்ள இன்னொரு தாதாசாரியாருடைய பிள்ளையும் வக்கீலாக இருக்கிறார். அவர் என்ன செய்தார் என்றால், எப்போதும் கையில் ஒரு குண்டூசியை வைத்துப் பல்லைக் குத்தித் தமது கையை தலைமுகம் முதலிய இடங்களில் எல்லாம் துடைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பற்றி நான் இன்னமொரு செய்தியும் கேள்விப்பட்டேன். அவர் தங்கப் பதுமை போல இருக்கும் தம்முடைய சம்சாரத்தை அலட்சியம் செய்துவிட்டு, பறைச்சிக்கும், வெள்ளைக்காரனுக்கும் பிறந்த ஒரு சட்டைக்காரியோடு சகவாசம் செய்து வருகிறாராம்; அவளுக்குச்