பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

161

சொந்த வீடு முதலிய செளகரியங்களை எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்து அவளுக்கு அடிமை போல இருந்து வருகிறாராம். இவைகளை எல்லாம் நான் சொல்வதில் இருந்து, நான் பிராம்மணர்களையாவது மற்றவர்களையாவது தூவிக்கிறேன் என்று நீ நினைத்துவிடக் கூடாது. இவைகளுக்கு எல்லாம் இங்கிலீஷ் பாஷை கற்பதே முதன்மையான காரணம் என்று நினைக்கிறேன். அப்படிக் கற்பதனால், ஜனங்கள் வித்தை கற்கவும் உத்தியோகம் பார்க்கவும் பெரிய பட்டணங்களில் போய் அடைகிறார்கள். சிறிய கிராமங்களாக இருந்தால், அவ்விடத்தில் ஜனங்கள் கொஞ்சமாக இருப்பதால், கட்டுப்பாடு இருக்கும். கட்டுப்பாட்டை மீறி நடப்பவர்களை மற்றவர்கள் இகழ்வார்கள். பொது ஜனங்களின் அபிப்பிராயத்துக்காக பயந்து எல்லோரும் ஒழுங்கான வழியில் தத்தம் மதாசாரக் கிரமப்படி நடப்பார்கள். பெரிய பட்டனங்களில், ஒருவனுடைய செய்கைகள் மற்றவன் கவனிக்கிறதில்லை; கவனிப்பதற்கு அவகாசம் இருப்பதும் இல்லை. கவனித்துக் கண்டிக்கப் போனாலும், ஒருவனுடைய நடத்தையாவது செய்கையாவது இன்னொருவன் துவித்தால், அது அவதூறுக் குற்றம் என்று இங்கிலீஷ் சட்டம் சொல்லுகிறது. ஆகையால், அது குற்றமாக முடிகிறது. மனிதரில் பெரும்பாலோர் எப்போதும் மற்றவருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கியே ஒழுங்காக நடக்கும் சுபாவம் உடையவர்கள். எவரும் தம்மைக் கண்டிக்கிறதும் இல்லை என்ற ஒரு தைரியம் ஏற்பட்டுவிடுகிறது. ஆகையால், நல்ல உயர்குலத்தில் உதிக்கிறவர்கள் கூட படிப்படியாகக் கெட்டு ஹீனமார்க்கங்களில் நடந்து விடும்படிபட்டன. வாழ்க்கை, காப்பிக் கடைகள் முதலியவைகளால் எத்தனையோ யுகங்களாக நமது ரிஷிகளும் முன்னோர்களும் ஏற்படுத்தி ஸ்தாபித்து வைத்திருந்த மதாசார ஒழுக்கங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து போய்விட்டதை நாம் கண்ணால் பார்க்கிறோம். அந்த இங்கிலீஷ் படிப்பு நம்முடைய தேசத்தில் 100-க்கு 6 பேருக்குத் தான் ஏற்பட்டிருக்கிறது என்றும், இன்னும் மற்றவருக்கும், முக்கியமாக நம்முடைய பெண் பிள்ளைகளுக்கும், அது கற்பிக்கப்பட வேண்டும் என்றும், நம்முடைய தலைவர்கள் கோஷித்துமா.வி.ப.I-12