பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

மாயா விநோதப் பரதேசி

அவன் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நற்குண மடந்தையான வடிவாம்பாள், “இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை எல்லாம் ஏற்படுத்திய நம்முடைய முன்னோர்கள் மதியினர்கள் அல்ல. அவர்கள் சகலமான சூட்சு மங்களையும் தந்திரங்களையும் தெரிந்து கொண்ட மேதாவிகள் என்பதைப்பற்றி சந்தேகமே இல்லை. குடும்ப வாழ்க்கையின் மர்மங்களையும் ஸ்திரீ புருஷர்கள் ஒருவரிடத்தொருவர் நடந்து கொள்ள வேண்டிய உத்தமமான தர்மங்களையும் அவர்கள் கடைந்து வெண்ணெய் போலத் திரட்டி எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். அது எப்போதும் அழியாத சாசுவதமான தர்மம். அதற்கு ஒருநாளும் கெடுதல் நேராது. கலியுகம் 5000-ம் வருஷத்துக்கு மேல், உயர்குலத்து மனிதர்களுடைய ஆசார தர்மங்கள் எல்லாம் சிதைவடைந்து போகும் என்றும், நீசர்களுடைய தர்மங்களே தலையெடுத்து நிற்கும் என்றும் நம்முடைய முன்னோர்கள் தம்முடைய தெய்வீக சக்தியினால் தீர்க்க தரிசனமாகச் சொல்லி முன்னரே எழுதி வைத்திருக்கிறார்கள். அதுபோலவே தான் இப்போது அனுபவத்தில் மனிதர்கள் நடக்கிறார்கள். இப்போது ஜனங்கள் மாறுபட்டு நடப்பது எனக்கு அவ்வளவு விநோதமாகத் தோன்றவில்லை. இப்படி ஜனங்கள் மாறுபடுவார்கள் என்று எத்தனையோ லட்சம் வருஷங்களுக்கு முன்னிருந்த நம்முடைய முன்னோர்கள் கண்டு புராணங்களில் எழுதினார்களே அதைப்போன்ற அற்புதமும் ஆச்சரியமும் வேறே இருக்கப் போகிறதா? இதற்கு முன் இரணியன், இரணியாகூடின், இராவணன் முதலிய எத்தனையோ துஷ்டர்கள் கடவுளுடைய ஆதிக்கத்தையே மறுத்து, தம்மையே கடவுளாக மதித்து மமதை பேயினால் பீடிக்கப்பட்டு உலகை ஆட்டி வைக்கவில்லையா? இந்த உலகம் தோன்றிய முதல், எத்தனையோ விதமான புதிய புதிய மதஸ்தர்களும் நாஸ்திகர்களும் தோன்றி ஜனங்களின் மனப்போக்கையும் நினைவுகளையும் கொள்கைகளையும் கலக்கி மாற்றவில்லையா? இப்படிப்பட்ட கோடாது கோடி மாறுதல்களும், நூதன சக்திகளும், நூதன கோட்பாடுகளும் உலகில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன; மனிதருடைய மனத்தை மாற்றிக் கொண்டே போகின்றன;