பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

165

அப்படி ஒவ்வொன்றும் கொஞ்ச காலம் இருந்து அழிந்து போகிறது. கடைசியில் மரத்திற்குள் ஆணி வைரம் உறுதியாக நிலைத்து நிற்பது போல கடவுளின் சனாதன தர்மம் என்றைக்கும் அழியாமல் நிலைத்து நின்று துல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. நம்முடைய தேசமோ எத்தனையோ கற்ப காலங்களையும், யுகங்களையும் கண்டு கணக்கு வைத்துக் கொண்டு வருகிற மகா அற்புதமான தேசம். வெள்ளைக்காரருடைய தேசத்தில் சுமார் 2500 ௵ த்திற்கு முன் என்ன இருந்தது என்பதே எவருக்கும் தெரியாது. இந்த 2500-௵ காலத்தில் பிறந்து இறந்த அரசர்களின் செய்கைகளையும், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை முதலிய துர்க்குணங்களாலும் மதவைராக்கியத் தாலும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மடிந்த விவரங்களையும், அந்தத் தேசத்தில் சட்டங்களும் நீதி ஸ்தலங்களும் ஒவ்வொன்றாக விருத்தியாகிக் கொண்டே போன விவரங்களையும் எழுதி அதற்குத் தேச சரித்திரம் என்று பெயர் கொடுத்து வெள்ளைக்காரர் பெருமை பாராட்டி அதைப்போன்ற தேசசரித்திரம் நம்முடைய நாட்டில் இல்லை என்று சொல்லி நம்மை அநாகரிகமான மனிதர்கள் என்று சொல்லி இகழ்கிறார்கள். எத்தனையோ லட்சம் லட்சம் ஆண்டுகளாக இருந்து நாகரிகம் அடைந்து வந்திருக்கும் நம்முடைய தேசத்தில் இருந்து ஆண்டு வந்த அரசர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதைவிட, கடலின் நீர்த்துளிகளைக் கணக்கெடுத்து விடுவது சுலபம் என்று நினைக்கிறேன். அத்தனை அரசர்களின் செய்கைகளையும் சரித்திரங்களையும் புஸ்தகமாக எழுதினால், அவைகளை வைப்பதற்கு இந்த உலகத்தில் போதுமான இடம் இருக்குமா என்பதே சந்தேகம். அவைகளை ஒரு மனிதன் படித்து முடிப்பதென்றால், அவன் எத்தனை கோடி கற்பகாலம் ஜீவித்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அந்தச் சரித்திரங்களை எல்லாம் படித்து மனிதர்கள் புதுமையான சங்கதி எதைத்தான் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. எந்தத் தேசத்தின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அது மண்ணாசை பெண்ணாசை, பொன்னாசை, மதப்போர் முதலிய விஷயங்களிலும், அவை சம்பந்தமான